Home

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்கள் நலமோடு வாழ வாழ்த்தி, எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார். https://twitter.com/OfficeOfOPS/status/1314117570065248258 http://mmnews360.net/3292/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ http://mmnews360.net/3289/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86/
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள கடிதத்தில்… கர்நாடக அரசு பல தமிழ் பள்ளிகளை பல்வேறு மாவட்டங்களில் தொடங்கியுள்ளது, மேலும் பல ஆண்டுகளாக தமிழ் மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் படித்து வருகின்றனர். கர்நாடக …
பணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!…
கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் அவர்களின் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!… கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் அவர்களின் ஒரே சாதனை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வழிக்காட்டுக் குழுவில் இடம் பெற்றதற்காக அமைச்சர் ஜெயக்குமாரை, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, வழிக்காட்டு குழு உறுப்பினர் மோகன் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,திமுக பாஜக வுடன் கூட்டணி வைக்கலாம் என பொன் ராதாகிருஷ்ணன் …
அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது…
கடந்த மார்ச் மாதத்தில் கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கி முடிவெடுக்கப்பட்டு,பயிற்சி வகுப்புகள் 7.10.2020 முதல் அண்ணா மேலாண்மை நிலையத்தில், தொடங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, உரிய சமூக இடைவெளி விடுதல், முகக்கவசம் அணிதல் ஆகிய முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளுடன் தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சி மீட்டர் போன்றபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பயிற்சியாளர்கள்அனுமதிக்கப்பட்டனர். இப்பயிற்சியினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பயிற்சித் துறை தலைவர், திரு.வெ.இறையன்பு இஆப, அவர்கள் காலை 10.30 மணியளவில் தொடங்கி வைத்தார். முதலில் அண்ணா மேலாண்மை நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அரசு அலுவலர்கள் பயிற்சி நிலையத்தின் சார்பில் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கான …
ஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ!…
ஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோவில் கலந்து கொள்ள இந்தியா வருமாறு அமைச்சர் அழைப்பு!… 2021ல் நடைபெற உள்ள ஏரோ இந்தியா என்னும் நிகழ்ச்சி குறித்து இன்று தூதர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவத் தளவாட உற்பத்தித் துறை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 முதல் 7 ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற உள்ள பதிமூன்றாவது ஏரோஷோ குறித்து சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தூதர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறையில் தலைசிறந்த 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்று தன்னிறைவை அடைய இந்த ஏரோஷோ உதவியாக இருக்கும் என்று கூறினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள்  இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வர வேண்டும் என்று அப்போது அவர் அழைப்பு விடுத்தார்.  பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பாதுகாப்புத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் திரு பி எஸ் எடியூரப்பா, மாநாட்டிற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும் என்று உறுதியளித்தார்.
பிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு!…
கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன் போன்ற பல படங்களை இயக்கியுள்ள இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள். இந்நிலையில் இவருடைய பேஸ்புக் கணக்கில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இவருக்கு திருமணம் ஆனதாக செய்தி வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து சீனு ராமசாமி அவர்கள், இது தவறான தகவல் எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்!.. என தெரிவித்துள்ளார். இதற்கு பல ரசிகர்கள் கிண்டலாக பதில் அளித்து வருகின்றனர். https://twitter.com/seenuramasamy/status/1313722383925080064
முதல்வர் வேட்பாளர்!… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்!…
கடந்த சில நாட்களாகவே அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடுமையான போட்டி நிலவி வந்தது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதில் கட்சிகள் முனைப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதிமுக கட்சியில் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில் குழப்பமான சூழ்நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில் எடப்பாடி பன்னீர்செல்வம் அவர்கள், அதிமுக முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகளை சார்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், எடப்பாடி பன்னீர்செல்வம் அவர்களுக்கு, தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவித்துள்ளார். https://twitter.com/Vijayabaskarofl/status/1313733340608913408
பிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்!… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து!…
ஜாகீர் கான் என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் 2000 முதல் 2014 வரை இந்திய அணியில் விளையாடினார். கபில்தேவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் இரண்டாவது வெற்றிகரமான விரைவு வீச்சாளராகத் திகழ்ந்தார். இவர் பரோடா அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் விளையாடிய 9 போட்டிகளில் 21 இலக்குகளை எடுத்தார். 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் விளையாட்டு விருதுகளில் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் அருச்சுனா விருதை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 282 இலக்குகளை வீழ்த்தியுள்ள …
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ!…
டுவைன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். கடந்த சில வருடங்களாக இவர் ஐபிஎல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். https://www.youtube.com/watch?v=32SJYqJmK3Q இவருடைய விளையாட்டு திறமைக்காக மட்டுமல்லாமல் இவருடைய நகைச்சுவையான பேச்சு மற்றும் இவருடைய நடனத்திற்காக பல ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். தற்போது IPL சீசனில் விளையாடிக் கொண்டிருக்கும் பிராவோ அவர்களுக்கு இன்று(07-10-2020) பிறந்தநாள்!… ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
முடக்கும் கொரோனா!… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை!…
பல மாதங்களாக கொரோனாவினால் ஏற்பட்ட முடக்கம் பலருடைய வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் வாழ்க்கையை தள்ள முடியாத அளவிற்கு, கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறை கடமையை செய்வது மட்டுமல்லாமல், இயலாத பல மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றனர். தமிழ்நாடு காவல் துறை சார்பாக செய்யப்பட்ட உருக்கமான உதவி குறித்த செய்தி தான் இது! அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே 110 வயது ஆன மூதாட்டி கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்த அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாதமாதம் அவரது குடும்பத்திற்கு தேவையான அரிசி¸ பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உடை …
குறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்!..
சோசியல் மீடியாவில் பல தகவல்களையும் தனது எண்ணங்களையும் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார் திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள். அவ்வாறாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்திதான் இது. குறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். https://twitter.com/vijaypnpa_ips/status/1312963254327549953
க/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா!..
நடிகர் சூர்யா க/பெ ரணசிங்கம் படத்திற்கான, தனது விமர்சனம் மற்றும் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் என அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தின் இயக்குனர் நடிகர் நடிகைகள் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் #KaPaeRanasingam இயக்குனர் @pkvirumandi1 @VijaySethuOffl @aishu_dil @GhibranOfficial @BhavaniSre @kjr_studios @ZEE5Tamil மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். https://twitter.com/Suriya_offl/status/1312697062341791744
ஆயுர்வேதம் மற்றும் யோகா மூலம் கொவிட்-19-க்கு சிகிச்சை!
கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ நெறிமுறையை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ நெறிமுறையை, ஆயஷ் அமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் முன்னிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று வெளியிட்டார். நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், நிதி ஆயோக் சுகாதார பிரிவு உறுப்பினர் பால் ஆகியோரும் காணொலி காட்சி மூலம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கொவிட்-19-க்கு சிகிச்சை அளிக்கும் தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறையில், ஆயுர்வேதா மற்றும் யோகா ஆகியவற்றை …
ஆக்கி பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளது!…
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி பயிற்சி பெங்களூருவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெற்கு மையத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இது முழு வீச்சை விரைவில் எட்டும் என்று அணி தலைவர்களும், பயிற்சியாளரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அணியின் தலைவர் மன்பிரீத் சிங் உட்பட முகாமுக்கு வந்த ஆறு வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்திய விளையாட்டு ஆணைய மையத்திலும் மருத்துவமனையிலும் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். "நான் பயிற்சிக்கு திரும்பிய போது எனக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது நாங்கள் மீண்டும் பயிற்சியில் இணைந்துள்ளோம். நாங்கள் படிப்படியாக பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான திட்டத்தை பயிற்சியாளர்கள் வகுத்துள்ளனர்  விரைவில் பயிற்சி முழு வீச்சை எட்டும் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது," என்று மன்பிரீத் கூறியுள்ளார்.
ஒரே பாரதம்!.. உன்னத பாரதம்!..
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனமும், இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனமும் இணைந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை மேம்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பணியாற்றி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலும் தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவுத் தயாரிப்புத் தொழில்நுட்ப சபையில் இணைந்துள்ள மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனமும், இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனமும் இணைந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு 2020 மே 8ஆம் தேதி முதல் 2020 ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஏற்பாடு செய்திருந்தன. ஒரே பாரதம் உன்னத பாரதம் நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு:2020 மே மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், 32 இணை மாநிலங்களில் 6141 பேர் பங்கேற்ற 27 நிகழ்ச்சிகளை நடத்தியது. 2020 ஜூன் மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், 26 இணை மாநிலங்களில் 4167 பேர் பங்கேற்ற 52 நிகழ்ச்சிகளை நடத்தியது. 2020 ஜூலை மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை  நிறுவனங்கள் 26 இணை மாநிலங்களில் 2966 பேர் பங்கேற்ற 17 நிகழ்ச்சிகளை நடத்தியது.2020 ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் 26 இணை மாநிலங்களில் 20 நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டிருந்தது.  இதுவரை 5 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் நிகழ்ச் சிகளை நடத்தியுள்ளன. அவற்றின் அறிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 15 நிறுவனங்களுக்கான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.  இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம் "ஒரே பாரதம் உன்னத பாரதம்" திட்டத்தின் கீழ் "ஆன்லைன் தேசிய கவிதை மற்றும் வாசிப்புப் போட்டிகளுக்கு " ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான பதிவுகள் நாடெங்கும் தொடங்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் தங்கள் இயற்றிய கவிதைகளையம் அவற்றின் வாசிப்பு அடங்கிய வீடியோக்களையும் அனுப்பியுள்ளனர்.இவற்றின் மீதான தீர்ப்பு கவிதைகளின் கருத்துக்கள், மொழி நடை, கவிதைகளின் அசல் தன்மை மற்றும் கவிதை வாசிப்புச் சிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.
திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்தது உயர் நீதிமன்றம்…
தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டிஸை ரத்து செய்து …
கரோனா, இ-பாஸ், இரண்டாவது தலைநகரம் குறித்த கேள்விகளுக்கு, அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதில்கள்…
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் முறையை ரத்து செய்ய முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அதனை அறிவிப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்… சென்னை பட்டாளத்தில் உள்ள கரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி உதயகுமார் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 381 ஆவது வயதை கடந்த சென்னை மாநகரத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருவதாவும் தமிழகத்தில் சராசரியாக 252.2 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. இது சராசரியான அளவைவிட 28 சதவீதம் அதிகமாக மழை …
2019ஆம் ஆண்டுக்கான வீர , தீர செயலுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருது
ஆர். ஸ்ரீதருக்கு வீர , தீர செயலுக்கான 2019 – ஆம் ஆண்டுக்கான “ ஜீவன் ரக்ஷா பதக் " விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 நபர்களை மீட்டதற்காக , தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதருக்கு வீர , தீர செயலுக்கான 2019 – ஆம் ஆண்டுக்கான “ ஜீவன் ரக்ஷா பதக் " விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார். நீரில் மூழ்கி விபத்து …
குழந்தைகள் முக கவசம் கட்டாயம் – WHO
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கொரோனா தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இதனை அடுத்து 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது. குறிப்பாக மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்துக்காவது இடைவெளி …
IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் – முதல்வர் வாழ்த்து!
2019-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளான K. பூரணசுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி… தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 2019-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த K. பூரணசுந்தரி மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் சிறப்பான முறையில் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் …
MMNews360 - மாண்புமிகு மக்களுக்காக

Trusted And Informative News