கொரோனா வைரஸ் காய்ச்சல் – பாதுகாப்பு வழிமுறைகள்


மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வழங்கியுள்ள பாதுகாப்பு நடைமுறைகள்

கொரோனா வைரஸ் (nCov-2019)

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும்.

சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இது

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நோயின் அறிகுறிகள்:

காய்ச்சல், இருமல் மற்றும் சளி – உடல் சோர்வு

ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.

கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம்:

நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது. * மேலும் இருமல் மற்றும் தும்பல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது.

நோய் தடுப்புநடவடிக்கைகள் :

தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடிகொள்ள வேண்டும். + சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும். சிகிச்சைகள் + சளி, இருமல் மற்றும் காய்ச்சல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில்உள்ள மருத்துவரை அனுகவும். + இளநீர், ஓ.ஆர்.எஸ், கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல் வேண்டும்.

அனைத்து மாநிலங்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தல்:

இருமல், தும்மல் உள்ள மாணவர்களை கைக்குட்டை, டிஷ்யூ பேப்பர் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்

காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளி, பொது இடங்களுக்கு செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …
பணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!…
கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் …
அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது…
கடந்த மார்ச் மாதத்தில் கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *