மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசனை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்து பேசினர்


மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசனை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்து பேசினர்.
தமிழக முஸ்லிம் அமைப்பு சார்ந்தவர்கள் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனை சந்தித்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முதல் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததிற்க்கு தமது நன்றியை தெரிவித்தனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான முஸ்லிம் போராட்டத்திற்கு தமது ஆதரவை என்றும் இருக்கும், அதே நேரத்தில் எந்த வகையிலும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கப் போவதாக கமலஹாசன் கூறினார். மேலும் போராட்டம் உறுதியாகவும் வலிமையாகவும் நடந்திட வேண்டும் அதேநேரத்தில், எந்த வகையிலும் அதில் வன்முறை இருந்துவிடக் கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கு இஸ்லாம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து தங்கள் ஒத்துழைப்பை தருகிறோம் என்று தெரிவித்தனர்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவுறுத்தலின் பெயரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும் சந்தித்து பேசினர்.

இறையடியார் காஜா மொய்தீன் (மாநிலத்தலைவர் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்) மௌலவி நசீர் அஹமது காசிமி (மாநில உலமாக்கள் பேரவை ) போன்ற பல முஸ்லிம் அமைப்புகள் நடிகர் கமலஹாசனை சந்தித்து பேசினர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …
பணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!…
கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் …
அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது…
கடந்த மார்ச் மாதத்தில் கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *