மக்கள் நீதி மய்யம் அறிக்கை – 05-03-2020


நேற்று வாரப்பத்திரிக்கை செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு, கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அறிக்கை.

நேற்று இரவு வாரப்பத்திரிக்கை செய்தியாளர் கார்த்திக் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று ஊடகம் இது பழைய செய்தி.

இன்றைய தரம் தாழ்ந்த அரசியலில் நிர்வகிக்கும் ஜனநாயகத்தில் ஊடகம் நான்கில் ஒன்றல்ல இது மையத் தூண்.

மக்களிடம் ஊடகங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வால், இந்திய ஜனநாயகத்தின் மாண்பு
பல முறை காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் வார பத்திரிக்கையில் செய்தியாளர் தாக்கப்பட்டது ஊடக சுதந்திரத்திற்கு விடப்படும் சவால். இச்சம்பவத்தை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கிறது.
கருத்தியல் ரீதியில் பதில் அளிக்க முடியாமல் திணறும் ஆளும் அரசின் இயலாமையை மறைத்திட, வன்முறையை கையில் எடுப்பது மிகுந்த ஆபத்தான போக்காகும்.
நாக்கில் வன்முறை சுமந்து செல்லும் சில அரசியல்வாதிகள் விதைத்தது இது. இந்த வன்முறை விஷ செடிகள் விரைவில் களையப்பட வேண்டும். நாம் அனனவரும் சேர்ந்து வன்முறையை தடுக்க வேண்டும். எப்போதும் வன்முறைக்கு எதிராக மக்கள் நீதி மையம் குரல் கொடுக்கும்.
என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …
பணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!…
கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் …
அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது…
கடந்த மார்ச் மாதத்தில் கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *