விற்பனையில் உச்சத்தை தொட்ட ஆவின்


ஆவின் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக அதிகப்படியான 12.95 லட்சம் லிட்டர் விற்பனையை எட்டியது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக “ஆவின்” எனும் வணிக பெயர் தமிழகத்தின் அனைத்து குடும்பங்களிலும் பிரபலமாக உச்சரிக்கப்படும் பெயராக உள்ளது. ஆவின் நிறுவனம் கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 23.51 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை மருத்துவ வசதி, செயற்கை முறை கருவூட்டல் வசதி, மானிய விலையில் அடர் தீவனம் மற்றும் தாது உப்பு கலவை, பசுந்தீவனம், தேவையான புல் கரணைகள் மற்றும் திறன் மேம்பாடு பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. பால்வளத்துறை, கிராம அளவில் கிராம பொருளாதார மேம்பாடு மற்றும் மகளிர் சுய முன்னேற்றம் காண வழி வகை செய்கிறது. இவ்வாறு விற்பனை பெருக்கத்தால் பால் உற்பத்தியாளர்களின் வருமானம் பெருக தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் 12,585 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராமப்புற 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது கடந்த 2018-19ல் நாளொன்றுக்கு சராசரியாக 29.46 லட்சம் லிட்டர் கொள்முத 1 செய்யப்பட்ட பால், தற்போது கிராமப்புற 30 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …
பணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!…
கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் …
அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது…
கடந்த மார்ச் மாதத்தில் கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *