மை தீட்ட வா – Part 1


உருக் கொடுத்து, அதில் உயிர் கொடுத்து, கல்வி தனமளித்து, இன்றளவும் என்னை, அன்பால் சுமந்து கொண்டிருக்கும், என் தாய், தந்தை, ருக்மணி, முனியாண்டி அவர்களுக்கு என்னுடைய கோடானக் கோடி நன்றிகள்!…

முன்னுரை:

மொழியின், முதுகெலும்பு எழுத்துக்கள். மனிதன், தன் தொடர்பு பாலத்தை நீட்டிக்க தொகுத்த குறியீடுகளின், தொகுப்புதான் கடிதம்.

மலை இடுக்குகளில் கீறலாய், பனை ஓலைகளில் கோடுகளாய், அவசர அழைப்பு, தந்தியாய், ஒற்றை பத்தியில் அஞ்சல் அட்டையாய், சற்றே நீண்டு இன்லேண்ட் லெட்டராய், கணினித் திரையில் இமெயிலாய், சிறு தொடு திரையில் எஸ்எம்எஸாய், என எத்தனை வடிவம்தான் இந்த கடிதத்திற்கு?

நேரில் வாய்மொழியால்க் கூற முடியா விஷயத்தையும்க் கூட, கடிதத்தில் கொட்டித் தீர்த்து விடலாம். அப்படியாக அன்பாய், ஆறுதலாய், உரிமையாய், உண்மையாய், உணர்வாய், சில மடல்கள்!… இதோ உங்களுடன்,….

நானும்,

மகாதேவன் முனியாண்டி

1. தம்பி ஊருக்கு வந்துட்டு போப்பா!…

அன்புள்ள மகனுக்கு, உன் அத்தை மகளின், வாயிலாக உன் அன்னை எழுதிக் கொள்ளும் அன்பு மடல்!…

ஏன்யா, எப்படி ஐயா இருக்க? நல்லா இருக்கியா?, உங்கப்பா இங்க காடு, கழனினு திரிஞ்சுக்கிட்டு, சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கிட்டு இருக்காரு. வயசாயிடுச்சி சும்மா கெட அப்படின்னா கேக்க மாட்டுராரு. நீயும் வேலை, வேலைனு உடம்பை கெடுக்காதப்பா. உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு தீபாவளிக்கும் வரல, லெட்டரும் போடல? ஒரு எட்டு ஊருக்கு வந்துட்டு போயா!.

உன் மாமன் காரன் கல்யாணத்தை, எப்போ வச்சுக்கலாம்னு கேட்டுட்டு போறான். இங்க பாரு, இவ வெட்கப்பட்றத!. உனக்கும் வயசு ஆகுதுல்ல, எவ்வளவு நாள்தான் தனியாக கஷ்டப்படுவ?

அது என்னமோ நீ எங்கள நினைக்கிறாயோ, இல்லையோ, நானும், உங்கப்பாவும், உன்னை மட்டும்தான் நெனச்சி கிடக்கோம்.

உங்கிட்ட காசு, பணம் எதுவும் எதிர்பார்க்கலப்பா, எங்க கண்ணு மூடுமட்டும் உன்ன பார்த்து கிடந்தா அது போதும்ப்பா!. ஆண்டவ புண்ணியத்துல மூணு ஏக்கர் நலம் கிடக்கு, அத உழுது பிழைச்சா போதுப்பா.

எங்க மேல எதுவும் கோபம் இருந்தாலும், அதையெல்லாம் மறந்துட்டு உடனே ஊருக்கு கிளம்பி வாப்பா!….

உன் வரவை எதிர்பார்த்து கிடைக்கும் உன் அன்பு அன்னை.

அவ்வண்ணமே கோரும் உங்கள் அத்தை மகள்.

 1. தம்பி ஊருக்கு வந்துட்டு போப்பா!…
 2. உரம் வாங்கணும்ப்பா!
 3. எப்படிமா இருக்கீங்க?
 4. அன்புள்ள அத்தான்!
 5. உன்னை நினைச்சு ஏங்குறேன்டி!
 6. நமக்கு படிப்பு தான் முக்கியம்
 7. பிள்ளைங்க எப்படி இருக்காங்க?
 8. உடம்ப பாத்துக்க அம்மா!
 9. எப்படிங்க நிம்மதியா இருக்க?
 10. கொஞ்சம் ஓய்வெடுங்கப்பா!
 11. எப்பப்பா? ஊருக்கு வரீங்க?
திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …
பணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!…
கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் …
அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது…
கடந்த மார்ச் மாதத்தில் கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கி …

2 thoughts on “மை தீட்ட வா – Part 1”

 1. Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *