பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் திறப்பு – சேந்தமங்கலம்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (5.3.2020) நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.

உடன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.பி. அன்பழகன், மாண்புமிகு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் செல்வி.அபூர்வா,இ.ஆ.ப., நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கா. மெகராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *