கடற்கரை நகரம் – Part 2

இயற்கை அழகுதான்!..

அப்பா எங்க தான் இருக்கீங்க, உங்களுக்காக இன்னைக்கு உங்களுக்கு பிடிச்ச பட்டுப்புடவை கட்டி வந்திருக்கேன். வாழ்க்கையில சாதிக்கனும் தனிமையை தேடி போன எனக்கு அந்தத் தனிமையை வெறுத்துப் போய் உங்க பாசத்துக்காக திரும்ப வந்து இருக்கேன் பா. நான் என்ன செய்ய அப்பா நீங்க எப்ப பேசினாலும் கல்யாணத்தை பத்தி பேசியதால் தானே உங்க கிட்ட பேசுறது அவாய்ட் பண்ண. இன்னையோட சரியா மூணு மாசம் ஆச்சு உங்களை பார்த்து பேசி உங்களை இப்பவே பாக்கணும் பா என்று யோசித்தவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

சுபலட்சுமி…, சுபலட்சுமி…, என இரு முறை அழைத்த பின்புதான் அவள் சுயநினைவிற்கு வந்தாள். யார் நம்மை இப்படி அழைப்பது ஒருவேளை ஒருவேளை அப்பா, என்று தலை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளை மிகவும் நெருங்கி ஆடவர் ஒருவர் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

மிஸ்டர் மதன் நீங்கதானா, ப்ளீஸ் என்ன சுபலட்சுமினு கூப்பிடாதீங்க. கால் மீ சுபா, என நுனிநாக்கில் கூறினாள். இல்ல உங்கள இப்பதான் இரண்டாவது முறை பார்க்கிறேன் அதுக்குள்ள எப்படி உரிமை எடுத்துக் கூப்பிடுறது.

சாரி நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. எங்க அப்பா மட்டும் தான் என்ன சுபலட்சுமினு முழு பெயர் சொல்லி கூப்பிடுவார். நீங்க அப்படி கூப்பிடும் போதெல்லாம் எனக்கு எங்க அப்பா நியாபகம் வருது அதனால தான் அப்படி சொன்னேன்.

இட்ஸ் ஓகே மிஸ்.சுபா. விஷயத்துக்கு வருவோமா என்றான் மிகவும் கண்ணியமாக. அவனைத் தொடர்ந்து பார்த்த சுபா, மதி சொன்னது சரிதான், இவர் ஒரு நைஸ் பர்சன். வழக்கமான போலீஸ்காரர் மாதிரி இல்லாம, சினிமால வர போலீஸ் கமிஷனர் மாதிரி ஸ்லிம்மா ஸ்டைலா இருக்காரு, என எண்ணி கொண்டு இருந்தாள்.

சுபா பீச்சில பார்க்கலாம்னு ஏன் சொன்னீங்க. இப்பதான் இந்த இடம் நல்லா ரிக்கவர் ஆகி வருது, நமக்கு இந்த சுனாமி ரொம்ப புதுசு இல்ல, பாவம் எவ்வளவு பேரு உயிரையும் உடமையும் இழந்து கஷ்டப்பட்டாங்க.

இயற்கை அழகு தான், ஆனால் என்னவோ எப்பொழுதெல்லாம், கொடுமையான அழுத்தத்தை தாங்க முடியாம அப்பொழுது எல்லாம், ஏதோ ஒரு ரூபத்தில் பொங்கி வெடிச்சி அழிவை காட்டிட்டு போயிருது. மனிதன் தன் சக மனிதனை திரும்பிப் பார்க்கும் சூழ்நிலைய உருவாக்கிவிட்டு போகுது.

என் அப்பாவும் இதை தான் சொல்லுவாரு, மனிதன் ஒரு இடர் ஏற்படும் போதோ அல்லது இயலாமை போதும் மட்டும்தான் அடுத்தவன தேடி போறான். சேர்ந்து வாழும் பழக்கம் குறைந்து போச்சுன்னு சொல்லுவார்.

அவருக்கு இந்த அமைதியான கடற்கரை ரொம்ப பிடிக்கும் அதனாலதான் நான் உங்களை இங்கே பார்க்கலாம்னு சொன்னேன். நான் குழம்பி கொண்டிருக்கின்றத பார்த்து, மதி தான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்க சொன்னா. எங்க அப்பாவை எப்படியாவது கண்டுபிடித்து குடுங்க, மிஸ்டர் மதன், ப்ளீஸ்….

கண்டிப்பாக சுபா, இது என்னோட கடமை,

ஆமாம், கடைசியா எப்ப உங்க அப்பாவ பார்த்தீங்க?….

தொடரும்….


Advertisement:

One thought on “கடற்கரை நகரம் – Part 2”

  1. Selvam says:

    Nice. . .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *