வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை – கட்டாயம்


வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்த செய்தி குறிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என அரசு ஆணைகள் எண் 3312 நாள் 29.12.1983 மற்றும் 499 நாள் 29.12.1984ல் முறையே 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி அரசாணைகளின்படி கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும், மற்ற மொழிகள் பெயர் பலகையில் உபயோகிக்கப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும் என்றும், கடைகள், நிறுவனங்களில் பெயர் பலகை வைத்தல் குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா.நந்தகோபால் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *