தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்


மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது.
தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசு 15.4.2020 அன்று வெளியிட்ட ஆணையின்படி, 20.4.2020 க்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதற்கென, மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது. அந்த குழு, தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் 20.4.2020 அன்று தெரிவிக்க உள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிவெடுக்க உள்ளார்கள். எனவே, இது குறித்து தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அரசு தெரிவித்துக் கொள்கிறது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *