சேலம் மாநகராட்சி அம்மா உணவகங்களில் கட்டணத்தை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வழங்கும்


சேலம் மாநகராட்சியில் உள்ள 11 இடங்களில் அம்மா உணவகங்களில் உணவருந்தும் அனைவருக்கும் உணவுக்கான கட்டணத்தை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வழங்கும் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், கழக தலைமை நிலைய செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேலம் மாநகராட்சியில் கீழ்கண்ட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
மண்டலம் -1

  1. வார்டு 23 – உழவர் சந்தை அம்மா உணவகம்
  2. வார்டு 21 – மண்டல அலுவலகத்தில் உள்ள அம்மா உணவகம்
    மண்டலம் -2
  3. வார்டு 14 – தண்ணீர் தொட்டி அம்மா உணவகம்
  4. வார்டு 13 – குமாரசாமிபட்டி அம்மா உணவகம்
  5. வார்டு 29 – வெங்கடப்பன் சாலை அம்மா உணவகம்
  6. வார்டு 30 – அரசு மருத்துவமனை அம்மா உணவகம்
  7. வார்டு 27 – ராஜேந்திர சத்திரம் அம்மா உணவகம்
    மண்டலம் – 3
  8. வார்டு 32 – ஆற்றோரம், மார்க்கெட் அம்மா உணவகம்
  9. வார்டு 38 – ஜோதி தியேட்டர் சாலை அம்மா உணவகம்
    மண்டலம் – 4
  10. வார்டு 50 – மணியனூர் அம்மா உணவகம்
  11. வார்டு 56 – கருங்கல்பட்டி அம்மா உணவகம்

இது தவிர, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி மற்றும் மேட்டூர் ஆகிய 4 நகராட்சிகளிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.


இங்கு சூடான, தரமான, சுவையான காலை டிபன் மற்றும் மதியம் 3 வகையான கலவை சாத வகைகள் அரசு நிர்ணயித்த மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வுணவகங்களில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் வசதி குறைவான ஏழை எளிய மக்கள் உணவருந்தி வருகின்றனர்.


சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, அவர்கள் போதிய வருமானம் இன்றி உள்ளனர். எனவே இவர்களுக்கு உதவும் வகையில், அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 20.4.2020 (திங்கள்கிழமை) முதல் சேலம் மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் 11 அம்மா உணவகங்களிலும், மற்றும் ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி மற்றும் மேட்டூர் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களிலும், காலை மற்றும் மதியம் வேளைகளில் உணவருந்தும் அனைவருக்கும் உண்டான உணவு கட்டணத்தினை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஏற்றுக்கொள்ளும் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், கழக தலைமை நிலைய செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


மேலும், சேலம் மாநகராட்சியில் 2112 தூய்மைப் பணியாளர்களும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 356 தூய்மைப் பணியாளர்களும், மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25 தூய்மைப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.


இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போதும் இடையுறாது பணியாற்றி வருகின்றனர். இவர்களின் சேவையினை பாராட்டும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையில், சேலம் மாநகராட்சி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி, மற்றும் மே மாதம் 3ந்தேதி வரை தினமும் ஒவ்வொரு முகக்கவசங்களை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வழங்கும் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், கழக தலைமை நிலைய செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *