கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க சுத்திகரிப்பு முறைகளுக்கு உதவி செய்வதற்கான இரண்டு புதிய பொருள்களை DRDO அறிமுகப்படுத்தியுள்ளது


பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட் 19 நோய்க்கு எதிரான போராட்டத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), தன்னுடைய தற்போதைய தொழில்நுட்பத்தையும், அனுபவத்தையும் கொண்டு, பல்வேறு பொருள்களையும், கருவிகளையும், தொடர்ந்து தயாரித்து, பெரும் பங்காற்றி வருகிறது. புதிய பொருள்களை உருவாக்குவது, ஏற்கனவே உள்ள பொருள்களை, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, விரைவாக வடிவமைத்துக் கொடுப்பது போன்றவை உட்பட பல பணிகளை ஆற்றி வருகிறது. இந்த உலகளாவிய நோய்க் காலத்தின்போது, பொதுமக்கள் கூடும் இடங்களில் செயல்பாடுகளை அதிகரிக்கக்கூடிய இரண்டு புதிய கருவிகளை டிஆர்டிஓ அறிமுகப்படுத்தியுள்ளது.

னிமூட்ட அடிப்படையிலான தானியங்கி சுத்திகரிப்பு கருவி

தீயை அணைப்பதற்கு பனிமூட்டத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, தில்லியிலுள்ள தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் Centre for Fire Explosive & Environment Safety (CFEES), பனி மூட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொற்றுக்கிருமி சுத்திகரிப்பான் தெளிப்பு கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது. அலுவலக வளாகங்கள், கட்டடங்கள் ஆகியவற்றுக்குள் நுழையும்போது, கைகளை சுத்திகரித்துக் கொள்வதற்காக, எரிசாராயம் (alcohol) அடிப்படையிலான கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை, இந்த சுத்திகரிப்பான் தெளிப்பு கருவி, உள்ளே நுழைபவர்கள் மீது சுத்திகரிக்கும் திரவத்தைத் தெளிக்கும். நீர் சுத்திகரிப்புக்காக தயாரிக்கப்பட்ட நீர் பனிப்புகை ஆவி (water mist aerator) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

புற ஊதா சுத்திகரிப்பான் பெட்டி மற்றும் கைகளில் வைத்து பயன்படுத்தக்கூடிய புற ஊதாக் கருவி

புற ஊதாக்கதிர் சி ஒளி (Ultraviolet C Light) அடிப்படையிலான சுத்திகரிப்புப் பெட்டி மற்றும் கைகளில் வைத்துக்கொண்டு பயன்படுத்தக்கூடிய புற ஊதாக் கதிர் சி (254 நானோமீட்டர் அலைவரிசை கொண்ட  புற ஊதா ஒளிக்கதிர்) கருவியையும் பாதுகாப்புக் கழகத்தின் உடற்செயலியல், அதனைச் சார்ந்த அறிவியல்கள் கழகம் (Defence Institute of Physiology & Allied Sciences – DIPAS) மற்றும் உட்கரு மருத்துவம், அதனைச் சார்ந்த அறிவியல்கள் கழகம் (Institute of Nuclear Medicine & Allied Sciences – INMAS), தில்லியிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பட்டு நிறுவனம் (Defence Research Development Institute – DRDO) ஆய்வுக்கூடங்கள் ஆகியவை ஒன்றிணைந்து வடிவமைத்துத் தயாரித்துள்ளன.

புற ஊதா சி ஒளிக்கதிர், ஒளியின் மிகுந்த சக்தி நிறைந்த சிறிய அலைவரிசையைக் கொண்டதாகும். நோய்க் கிருமியின் மரபணுப் பொருளை அழிப்பதில் புற ஊதாக்கதிர் சி சிறந்ததாகும். இந்தக் கதிர்வீச்சு கிருமியின் ஆர் என் ஏ (Ribonucleic acid – RNA) வை சிதைத்து விடும். அதனால் அந்த வைரஸ் தங்களை பெருக்கிக் கொள்ள முடியாது. இந்த புற ஊதாசி ஒளிக்கதிர் நுண்ணுயிரிகளை விரைவில் கொன்றுவிடும். தொற்றுநோய்த் தடுப்பு சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை இந்த UVC ஒளி தவிர்த்து விடுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தததாக உள்ளது. தொடாமலேயே, இந்த சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *