புதுச்சேரி மாநில கழக துணைத் தலைவர் N. உமாபதி மறைவு – அதிமுக இரங்கல் செய்தி


புதுச்சேரி மாநில கழக துணைத் தலைவர் N. உமாபதி மறைவிற்கு, அதிமுக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநில கழக துணைத் தலைவர் திரு. N. உமாபதி அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

உமாபதி கழகத்தின் மீதும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு ஆரம்ப காலம் முதல் கழகப் பணிகளை ஆற்றி வந்துள்ளார்.

அன்புச் சகோதரர் உமாபதி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் உள்ளது…

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *