பி.எப்.எம்.எஸ். மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.36,659 கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக செலுத்தப்பட்டது


நிதி அமைச்சகம்

கோவிட்-19 முடக்கநிலை அமல் காலத்தில் 16.01 கோடி பயனாளிகளுக்கு பி.எப்.எம்.எஸ். மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.36,659 கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக செலுத்தப்பட்டது.


பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ரொக்கப் பயன் நிதியும் நேரடியாகச் செலுத்தும் நடைமுறை மற்றும் டிஜிட்டல் பட்டுவாடா கட்டமைப்பு மூலம் வழங்கப்பட்டது

நேரடியாக கணக்கில் செலுத்தும் நடைமுறையில் பி.எப்.எம்.எஸ். பயன்பாடு கடந்த 3 நிதியாண்டுகளில் அதிகரிப்பு, 2018-19 நிதியாண்டில் மொத்த விநியோகத் தொகை 22 %-ல் இருந்து 2019-20-ல் 45% ஆக உயர்வு

பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் உறுதி செய்து, விரயத்தை தவிர்த்து, செயல்திறனை மேம்படுத்தியுள்ளது

கோவிட்-19 முடக்கநிலை அமல் காலத்தில் 16.01 கோடி பயனாளிகளுக்கு பொது நிதி நிர்வாக வழிமுறையின் (Public Financial Management System (PFMS) மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.36,659 கோடிக்கும் அதிகமான தொகையை  நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் கணக்குகள் பிரிவு கட்டுப்பாட்டுத் தலைவர் நேரடியாக செலுத்தியுள்ளார்.

நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்து, விரயத்தைத் தவிர்த்து, செயல்திறனை மேம்படுத்தியுள்ளது

மத்திய திட்டங்கள் (சி.எஸ்.)/ மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்கள் (சி.எஸ்.எஸ்.)/ சி.ஏ.எஸ்.பி. திட்டங்களின் கீழ் நேரடி பணப் பரிமாற்றம் செய்வதற்கு பொது நிதி நிர்வாக வழிமுறையின் மின்னணு பட்டுவாடா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலே சொல்லப்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதான அம்சங்கள்:

 1. கோவிட் முடக்கநிலை காலத்தில் (2020 மார்ச் 24 முதல் 2020 ஏப்ரல் 17 வரையில்) 16.01 கோடி பயனாளிகளுக்கு (11.42 கோடி [CSS/CS] + 4.59 கோடி [மாநிலம் ])  பொது நிதி நிர்வாக வழிமுறையின் மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு அளிக்கும் நடைமுறையின்படி அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.36,659 கோடிக்கும் அதிகமான தொகை (ரூ.27,442 கோடிகள் [மத்திய அரசின் ஆதரவு பெற்ற திட்டம் CSS+ மத்திய அரசு திட்டங்கள் (CS)] +Rs. 9717 [மாநில அரசு )  அளிக்கப்பட்டுள்ளது.
 2. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் அறிவித்த ரொக்க ஆதாயத் திட்டங்களின் கீழ் நேரடி பட்டுவாடா திட்ட மின்னணு பணப் பட்டுவாடா கட்டமைப்பின் மூலம் ஜன்தன் கணக்குகள் வைத்திருக்கும் பெண்களுக்கு தலா ரூ.500 செலுத்தப்பட்டது.   2020 ஏப்ரல் 13 ஆம் தேதி வரையில் 19.86 கோடி பெண் பயனாளிகளுக்கு ரூ.9.930 கோடி (நிதி சேவைகள் துறையின் தகவலின்படி) வழங்கப்பட்டுள்ளது.
 3. நேரடியாக கணக்கில் செலுத்தும் திட்டத்திற்கு பொது நிதி நிர்வாக வழிமுறை வசதியைப் பயன்படுத்தும் போக்கு கடந்த 3 நிதியாண்டுகளில் அதிகரித்துள்ளது. 2018-19 நிதியாண்டில் மொத்த விநியோகத் தொகை 22 %-ல் இருந்து 2019-20-ல் 45% ஆக உயர்ந்துள்ளது.

கோவிட் 19 முடக்கநிலை காலத்தில் (2020 மார்ச் 24 முதல் தகவல் சேகரிக்கப்பட்ட 2020 ஏப்ரல் 17 வரையில்) பணத்தை நேரடியாகச் செலுத்துவதற்கு பொது நிதி நிர்வாக வழிமுறை மின்னணு தளத்தின் பயன்பாடு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

 1. கோவிட்-19 முடக்கநிலை காலத்தில் அதாவது 2020 மார்ச் 24 முதல், தகவல் சேகரித்த ஏப்ரல் 17 ஆம் தேதி வரையிலான காலத்தில், மத்திய அரசு / மத்திய அரசின் உதவி பெற்ற திட்டங்களின் கீழான பணப் பயன்கள் பி.எப்.எம்.எஸ். மூலமாக.11,42,02,592பயனாளிகளுக்கு  ரூ. 27,442.08 கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் கிசான், 100 நாள் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Programme – NSAP) பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜ்னா, தேதிய ஊரக வாழ்வாதார லட்சிய நோக்குத் திட்டம், தேசிய சுகாதார லட்சிய நோக்குத் திட்டம், பல்வேறு அமைச்சகங்களின் கல்வி உதவித் தொகைகள் தேசிய கல்வி உதவித் தொகை முனையம் மூலம் வழங்கியது ஆகியவை இதில் அடங்கும்.
 2. மேலே குறிப்பிட்ட திட்டங்கள் தவிர, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழும் பணம் அளிக்கப்பட்டுள்ளது. ஜன் தன் கணக்குகள் வைத்திருக்கும் பெண்களின் கணக்குகளில் தலா ரூ.500 செலுத்தப்பட்டது. 2020 ஏப்ரல் 13 ஆம் தேதி வரையில் 19.86 கோடி பெண் பயனாளிகள் இதில் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.9.930 கோடி வழங்கப்பட்டிருந்தது. (நிதி சேவைகள் துறையின் தகவலின்படி)
 3. கோவிட்-19 முடக்கநிலை காலத்தில் உத்தரப்பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநில அரசுகளும் மற்ற அரசுகளும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த நேரடியாக கணக்கில் செலுத்தும் நடைமுறையைப் பின்பற்றியுள்ளன. 180 நலத் திட்டங்களின் கீழ் பி.எப்.எம்.எஸ். நடைமுறையை பின்பற்றி 4,59,03,908 பயனாளிகளுக்கு மாநில அரசுகள் 2020 மார்ச் 24 முதல், தகவல் சேகரிக்கப்பட்ட 2020 ஏப்ரல் 17 ஆம் தேதி வரையிலான காலத்தில்  ரூ.9,217.22 கோடி தொகையை அளித்துள்ளன.

நேரடியாகப் பணம் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்ட முதல் 10 நிலைகளில் உள்ள மத்திய அரசின் உதவி பெற்ற திட்டங்கள் / மத்திய அரசுத் துறை திட்டங்களின் விவரம்:

திட்டம்காலகட்டம் : [2020 மார்ச் 24 முதல், தகவல் சேகரித்த 2020 ஏப்ரல் 17 வரை]
பயன் பெற்ற பயனாளிகள்தொகை(ரூ. கோடியில்)
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (பிரதமர்-கிசான்) -[3624]8,43,79,32617,733.53
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்-[9219]1,55,68,8865,406.09
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS)-[3163]93,16,712999.49
இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் (IGNWPS)-[3167]12,37,925158.59
தேசிய ஊரக சுகாதார லட்சிய நோக்குத் திட்டம்-[9156]10,98,128280.80
பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் -[3534]7,58,153209.47
சிறுபான்மையினருக்கான ப்ரீ-மெட்ரிக் கல்வி உதவித் தொகை-[9253]5,72,902159.86
NFSA-யின் கீழ் பரவலாக்கப்பட்ட உணவு தானியக் கொள்முதலுக்கான உணவு மானியம்-[9533]2,91,25019.18
இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளி ஓய்வூதியத் திட்டம் (IGNDPS)-[3169]2,39,70726.95
தேசிய சமூக உதவித் திட்டம் ( NSAP)-[9182]2,23,98730.55

*பயன்பெற்ற மொத்த பயனாளிகள் 11,42,02,592 / தொகை :ரூ. 27,442.08 கோடி [மேலே பத்தி (i)-ல் உள்ளவாறு]

நேரடியாக பணம் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்ட முதல் 10 நிலைகளில் உள்ள மாநில அரசின் திட்டங்களின் விவரம்:

மாநிலம்திட்டம்காலகட்டம் : [2020 மார்ச் 24 முதல், தகவல் சேகரித்த 2020 ஏப்ரல் 17 வரை]
பயன் பெற்ற பயனாளிகள்தொகை(ரூ. கோடியில்) 
பிகார்DBT- கல்வித் துறை-[BR147]1,52,70,5411,884.66 
பிகார்கொரோனா சஹாயதா-[BR142]86,95,974869.60 
உ.பி.விவசாயிகள் ஓய்வூதியத்திட்டம்-[9529]53,24,855707.91 
உ.பி.உ.பி. தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் (3167)-[UP10]26,76,212272.14 
பிகார்முதலமைச்சரின் விரித்ஜன் ஓய்வூதியத் திட்டம் -[BR134]18,17,100199.73 
உ.பி.தொழுநொய், பிற உடற்குறைகள் உள்ளவர்களுக்கு ஊட்ட உணவு-[9763]10,78,514112.14 
பிகார்பிகார் மாநில மாற்றுத் திறனாளி ஓய்வூதியத் திட்டம் -[BR99]10,37,57798.39 
அசாம்AS – மாநில பங்களிப்பில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் (OAPFSC)-[AS103]9,86,49128.88 
பிகார்முதலமைச்சரின் விஷேஷ் சஹாயதா -[BR166]9,81,87998.19 
டெல்லிடெல்லி மூத்த குடிமக்களுக்கான நிதி உதவி-[2239]9,27,101433.61 

* பயன்பெற்ற மொத்த பயனாளிகள் 4,59,03,908 / தொகை :ரூ. 9217.22 கோடி [மேலே பத்தி (iii)-ல் உள்ளவாறு]

கடந்த மூன்று ஆண்டுகளில் பி.எப்.எம்.எஸ். வசதியை நேரடி பணம் செலுத்தும் முறை உபயோகம் அதிகரிப்பு:

கடந்த மூன்று ஆண்டுகளில் பொது நிதி நிர்வாக வழிமுறை வசதியைப் பயன்படுத்தி நேரடியாகப் பணம் செலுத்தும் முறை உபயோகம் அதிகரிப்பு: 2018-19ஆம் ஆண்டில் பரிவர்த்தனை எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்த (2017-18 நிலையுடன் ஒப்பிடுகையில்), 2019-20இல் 48 சதவீதமாக வளர்ச்சி இருந்தது. 2018-19 நிதியாண்டில் வழங்கப்பட்ட தொகை 22 சதவீத வளர்ச்சியில் இருந்து 2019-20 நிதியாண்டில் 45 சதவீதமாக உயர்ந்தது.

http://164.100.117.97/WriteReadData/userfiles/image/image001JPVB.png

பின்னணி

நேரடியாகப் பணம் செலுத்தும் திட்டத்தில் பணம் செலுத்துதல், தகவல் பதிவு செய்தல், கணக்கு பராமரித்தலுக்கு பொது நிதி நிர்வாக வழிமுறை வசதியை கணக்குகள் துறை கட்டுப்பாட்டுத் தலைவர் கட்டாயமாகப்  பின்பற்ற வேண்டும் என்று நிதியமைச்சகம் முடிவு செய்தது. 2015 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து பொது நிதி நிர்வாக வழிமுறை வசதி அமைப்பிடம் இருந்து பெறப்படும் பட்டுவாடா குறித்த மின்னணு கோப்புகளை நேரடி பணம் வழங்கலுக்கு பரிசீலிக்க வேண்டாம் என்று அமைச்சகங்கள் / துறைகளுக்கு (டிசம்பர் 2014-இல்) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நடைமுறையில் இருந்த வேலைப்பளு அதிகமாக இருந்த நடைமுறைகளுக்கு மாற்றாக, தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வங்கி / தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில், ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் உகந்தது என்ற நிலையில், குறிப்பிட்ட பயனாளியின் கணக்கிற்கே பணம் செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு அமல் செய்தது, முக்கியமான சீர்திருத்த நடவடிக்கையாக அமைந்துள்ளது. மத்திய அரசின் திட்ட நிதிகளை தனிப்பட்ட பயனாளிகளுக்கு அளிக்கவும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

பொது நிதி நிர்வாக வழிமுறையில் நேரடி பணம் செலுத்துவதன் பட்டுவாடா சூழல் முறைமை

பொது நிதி நிர்வாக வழிமுறை வசதியின் கீழ் பணம் பெறும் பயனாளி தகவல் தொகுப்பில் பயனாளிகளை சேர்ப்பது இரண்டு வழிமுறைகளில் செய்யப்படும். அதாவது,

 1. பொது நிதி நிர்வாக வழிமுறை பயனாளர் இடைமுகம் மூலம் எக்ஸெல் பதிவேற்றம் மற்றும் / அல்லது
 2. ஒருங்கிணைந்த வெளிப்புற முறைமை (முறைமைகள்)/ LoB செயல்பாடுகள் மூலம் SFTP சர்வர்கள் மூலம்
 3. வங்கிக் கணக்குகள் / தபால் நிலைய கணக்குகளை பொது நிதி நிர்வாக வழிமுறை வசதி உறுதிப்படுத்துவதுடன், ஆதார் எண்ணையும் உறுதிப்படுத்திக் கொள்கிறது.

ரொக்கம் மற்றும் திட்டப் பரிமாற்றங்களும் நேரடியாக செலுத்துதலில் அடங்கும். சமுதாயப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு வெற்றிகரமாக திட்டங்களை அமல் செய்ததற்காக அரசின் பல்வேறு சன்மானங்கள் / பரிமாற்றங்களும் இதில் அளிக்கப்படும்.

பொது நிதி நிர்வாக வழிமுறை வசதி மூலம் பணம் செலுத்தும் அமைச்சகங்கள் துறைகள்:

 1. அமைச்சகங்கள் / துறைகளிடம் இருந்து பயனாளிகளுக்கு நேரடியாகச் செலுத்துதல்;
 2. மாநில கருவூலக் கணக்கு மூலமாகச் செலுத்துதல்; அல்லது
 3. மத்திய / மாநில அரசுகளால் நியமிக்கப்படும் அமல்படுத்தும் முகமைகள் மூலமாக.

 நேரடியாக பணம் செலுத்துவதன் பயன்கள்

பின்வரும் விஷயங்களை நோக்கமாகக் கொண்டதாக நேரடியாக பணம் செலுத்தும் திட்டம் (CARE மூலமாக) உள்ளது:

 1. இரட்டைப் பதிவு மற்றும் தவறானவர்கள் கைக்குப் பணம் போவதைத் தடுத்தல்
 2. பயனாளிகளை சரியாகச் சென்றடைதல்
 3. பட்டுவாடாக்களில் தாமதத்தைக் குறைத்தல், மற்றும்
 4. மின்னணு பரிமாற்ற ஆதாயங்கள், பயன்கள் கிடைப்பதில் உள்ள தேவையற்ற நடைமுறைகளைக் குறைத்தல்

Source: Press Information Bureau – Govt. of India

More than Rs 36,659 crore transferred by using Direct Benefit Transfer (DBT)  through Public Financial Management System (PFMS)in the Bank accounts of 16.01 crore  beneficiaries  during COVID 2019 lockdown

Cash Benefits announced under Prime Minister Garib Kalyan Package also being transferred by using DBT Digital Payment Infrastructure

PFMS usage for DBT Payments increased over last #3 FYs;  total DBT amount disbursed increased from 22% in FY 2018-19 to 45%in FY 2019-20

DBT ensures Cash benefit directly credited into the account of the beneficiary, eliminates leakage and improves efficiency 

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *