தகவல் தொடர்பு கடல் பயணத்திற்கு உதவும் அயனி மண்டல எதிர் மின்னணு துகள்களின் அடர்த்தியை கணிக்க புதிய மாதிரி உருவாக்கம்

தகவல் தொடர்பு, கடல் பயணத்திற்கு மிகவும் தேவையான அதிக அளவிலான தரவுகளை கொள்ளக்கூடிய, அயனி மண்டல எதிர் மின்னணு துகள்களின் (எலக்ட்ரான்) அடர்த்தியைக் கணிக்கக் கூடிய உலகளாவிய மாதிரி ஒன்றை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், தன்னாட்சி அமைப்பான நேவி மும்பையில் உள்ள இந்திய புவி காந்தவியல் கழகத்தின்  ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

நீண்டகால அயனி மண்டல குறிப்புகளைப் பயன்படுத்தி, அயனி மண்டல எதிர் மின்னணு துகள்களின் அடர்த்தி மற்றும் உச்ச அம்சங்களை முன் கூட்டியே கணிக்கக் கூடிய, செயற்கை நியூரான்கள் பின்னலமைப்பை அடிப்படையாகக்கொண்ட, உலகளாவிய அயனி மண்டல மாதிரி ஒன்றை, இந்திய புவி காந்தவியல் கழகத்தின்   டாக்டர் வி சாய் கவுதம் தனது ஆராய்ச்சி மேற்பார்வையாளர் டாக்டர் எஸ் துளசிராம் உடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

பல்வேறு உருவகைகளை அறிதல், வகைப்படுத்துதல், தொகுத்தல், பொதுமைப்படுத்துதல், நேரியல் மற்றும் நேரியல் சாரா தரவுகளைப் பொருத்துதல், கால வரிசைக்கிரம கணிப்பு, போன்றவை தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவும் வகையில்,  மனித மூளையில் உள்ள முறைகளை (உயிரியல் நியூரான்களை)  பிரதி எடுக்கும்.

உயிரியல் நியூரான்களைப் பயன்படுத்தி, உலக அளவில் அயனி மண்டல வேறுபாடுகளை மாதிரிப் படுத்துவதற்கு இதுவரை, வெகுசில முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *