பிரதமர் மற்றும் மாலத்தீவு அதிபர் இடையே தொலைபேசி உரையாடல்

Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with H.E. Mr. Ibrahim Mohamed Solih, President of the Maldives.

The leaders updated each other about the current state of COVID-19 infections in their countries.

They expressed satisfaction that the coordination modalities agreed between SAARC countries were being implemented actively.

Prime Minister was happy to hear that the Indian medical team deployed earlier to Maldives, and the essential medicines gifted by India, had contributed towards controlling the spread of the infection in the islands.

Appreciating the special challenges that the pandemic poses for a tourism-dependent economy like the Maldives, Prime Minister assured the Maldivian President of continued Indian support for minimising the health and economic impact of COVID-19.

The two leaders agreed that their officials would remain in touch on issues arising out of the present health crisis, as well as other aspects of bilateral cooperation.

New Delhi
April 20, 2020

மாலத்தீவு அதிபர், மேன்மைமிகு, திரு. இப்ராகிம் முகமது சொலிஹ் உடன், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

தங்களது நாடுகளில் தற்போதைய கொவிட்-19 பாதிப்பு நிலைமைகளைப் பற்றி இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.

சார்க் நாடுகளுக்கிடையே ஒத்துக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு முறைகள் நன்றாக அமல்படுத்தப்படுத்தப்படுவதாக அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

மாலத்தீவுக்கு ஏற்கனவே அனுப்பப்ப‌ட்ட இந்திய மருத்துவக் குழுவும், இந்தியாவால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளும், தீவுகளில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றியதை அறிந்து பிரதமர் மகிழ்ச்சி அடைந்தார்.

மாலத்தீவைப் போன்ற சுற்றுலாவை சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் தொற்று விடுத்துள்ள கடினமான சவால்களைப் பற்றி பேசிய பிரதமர், கொவிட்-19இன் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்பை குறைக்க இந்தியாவின் ஆதரவு தொடருமென‌ மாலத்தீவு அதிபருக்கு உறுதி அளித்தார்.

தற்போதைய சுகாதார சிக்கல்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பின் இதர அம்சங்கள் குறித்தும் தங்களது அலுவலர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *