மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு.பழனிசாமி அவர்களின் அறிக்கை – நாள் 21.4.2020


மனித குலத்திற்கே சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸ்நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதாரப் பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையினர், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினைச் சார்ந்தவர்கள் தங்கள்குடும்பத்தையே மறந்து, தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர்.ஒவ்வொரு உயிரும் இந்த அரசுக்கு முக்கியம் என்று கருதி, இந்த அரசுசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, களத்தில் முன்னின்று பணியாற்றும்களப் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை நான் ஏற்கனவே அறிவித்துஇருந்தேன். இவர்களது பணியினை நாடே போற்றி, நன்றி பாராட்டிக்கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை,இறைவனுக்கு நிகராக நான் கருதுகின்றேன்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின்உடல்களை, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து தான் அடக்கம்அல்லது தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால்,மருத்துவப் பணியில் ஈடுபட்டு, நோய்த் தொற்றுக்கு ஆளாகி, தங்கள்இன்னுயிரை ஈந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வதுதொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தையும்,வேதனையும் அளிக்கின்றது. அவர்களை இழந்து வாடும் அவர்களதுகுடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்தெரிவித்துக் கொள்கிறேன்.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தன்னலம் கருதாமல்,மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரைத் துறப்பவர்களுக்கு, தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில், பொதுமக்கள்அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களைஅன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்கபாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் எனவும், மருத்துவர்கள்மற்றும் பிற களப் பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும்,மாண்புமிகு அம்மாவின் அரசு உங்கள் பக்கம் முழுமையாக நிற்கும்என்பதையும் இத்தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *