கோவிட் இந்திய சேவை’ எனும் பரிமாற்ற இணைய தளத்தை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்


கோவிட் 19 தொற்றின் போது லட்சக்கணக்கான இந்தியர்களுடன் நேரடி தொடர்பு அலைவரிசையை ஏற்படுத்தும் ‘கோவிட் இந்திய சேவை’ என்னும் பரிமாற்ற இணைய தளத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தொடங்கி வைத்தார். தற்போதைய கோவிட்-19 போன்ற சிக்கலான சமயங்களில், வெளிப்படையான மின்னணு ஆளுகையை உடனுக்குடன் வழங்குவதும், மக்களின் கேள்விகளுக்கு, அவசியமான பதில்களை துரிதமாக அளிப்பதும் இந்த முயற்சியின் நோக்கம் ஆகும். இதன் மூலம், மக்கள் தங்கள் கேள்விகளை கோவிட் இந்திய சேவையில் கேட்டு பதில்களை கிட்டத்தட்ட உடனே பெறலாம். ‘கோவிட் இந்திய சேவை ஒரு முகப்புப்பெட்டி போல் பின்னணியில் செயல்பட்டு அதிக அளவிலான சுட்டுரைகளை முறைப்படுத்தி, அவற்றை தீர்க்கக்கூடிய சீட்டுகளாக மாற்றி, தொடர்புடைய அதிகாரிக்கு உடனடித் தீர்வுக்காக அளிக்கும்.

‘கோவிட் இந்திய சேவையின் பிரத்யேக கணக்கை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சுட்டுரை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

மக்களின்கேள்விகளுக்குநிகழ்நேரத்தில்பதிலளிக்க‘கோவிட் இந்திய சேவையின்தொடக்கத்தைஅறிவிக்கிறேன்

அதிகாரப்பூர்வமானசுகாதாரதகவல்களைபயிற்சிபெற்றவல்லுனர்கள்தேவையானஅளவுக்குஉடனுக்குடன்பகிர்ந்துமக்களுடனானதொடர்புக்குபிஎம்ஓஇந்தியாட்விட்டர்இந்தியாபிஐபிஇந்தியா,         எம்எச்எஃப்டபிள்யுஇந்தியாஒருநேரடிஅலைவரிசையைகட்டமைக்கஉதவுவார்கள்.

இந்த சேவையின் அறிவிப்பை பற்றி பேசிய டாக்டர். ஹர்ஷ் வர்தன், “குறிப்பாக அவசியமான சமயங்களில், அரசுக்கும் மக்களுக்கும் இடையே, உரையாடுவதற்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் டிவிட்டர் ஒரு அத்தியாவசிய சேவை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியா சமூக இடைவெளியோடு கொரோனாவை எதிர்த்து போரிட்டு வரும் வேளையில், இந்த டிவிட்டர் சேவை தீர்வை பயன்படுத்த நாங்கள் ஒருங்கிணைந்த ஆன்லைன் முயற்சியை எடுத்ததற்காக மகிழ்கிறோம். ஒவ்வொரு கேள்வியையும் பிரத்யேகமாக மதித்து தேவையான அளவுக்கு பதிலளிக்கக்கூடிய பயிற்சி மற்றும் தேர்வு பெற்ற வல்லுனர் குழு இதை செயல்படுத்துகிறது. இது இந்திய மக்களுடன் எங்களுக்கு நேரடி அலைவரிசையை ஏற்படுத்திக் கொள்வதற்கும், அவர்களுடன் நிகழ்நேரத்தில் தொடர்பு கொள்வதற்கும், சுகாதாரம் மற்றும் பொது தகவல்களை அதிகாரப்பூர்வமாக வழங்குவதற்கும் உதவும்,” என்றார்.

இந்த பிரத்யேக கணக்கு, மக்களுக்கு உள்ளூர் முதல் தேசிய தகவல்கள் வரை அவர்கள் பார்வையில் அணுகத்தக்கவகையில் வழ்ங்கும். அரசின் நடவடிக்கைகள் பற்றிய சமீபத்திய தகவல்கள், சுகாதார சேவைகளை அணுகுவதைக் குறித்து அறிதல், ஒருவருக்கு அறிகுறிகள் இருந்தாலும் உதவிக்காக‌ யாரைத் தொடர்பு கொள்வது என தெரியாமல் இருப்பின் அதற்கான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை இந்த பிரத்யேக ‘கோவிட் இந்திய சேவை கணக்கு அளித்து, அதிகாரிகளை அடைய பொதுமக்களுக்கு உத்வேகம் அளிக்கும். ‘கோவிட் இந்திய சேவைக்கு சுட்டுரைகளை அனுப்புவதன் மூலம் மக்கள் தங்கள் கேள்விகளுக்கான பதில்களை பெறலாம்.

இந்த பதில்கள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக இருப்பதால், பொது கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் மூலம் அனைவரும் பயன் பெறலாம். பொது சுகாதார தகவல்கள் குறித்தான விரிவான கேள்விகளுக்கு அமைச்சகம் பதிலளிக்கும் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இதற்கு பொதுமக்களின் தனிப்பட்ட தொடர்பு தகவல்கள் அல்லது சுகாதார பதிவு தகவல்கள் தேவைப்படாது.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *