பிரதமர் வேளாண் திட்டத்தின் கீழ் பொது முடக்கக் காலத்தின் போது 8.89 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு ரூ17793 கோடி வழங்கப்பட்டுள்ளது.


பொது முடக்கக் காலத்தின்போது, விவசாயிகளும், விவசாயப் பணிகளும் பாதிக்கப்படாத வகையில் மத்திய விவசாய, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நிலவரம் பின்வருமாறு:

  1. பிரதமர் கிசான் சம்மான் நிதி  திட்டத்தின் கீழ் மார்ச் 24ம் தேதி முதல் இதுநாள் வரை ரூ 17793 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 8. 89 கோடி விவசாயக் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
  1. கோவிட் 19 தொற்று காரணமாக நிலவும் தற்போதைய பொது முக்கக் காலகட்டத்தில் உணவு பாதுகாப்பு அளிப்பதற்காக பிரதமர் ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு, பருப்பு வகைகளை விநியோகிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை, சுமார் 107077.85 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் ஏழைகள் நலத் திட்டத்தின் மூலம் பருப்பு வகைகள் விநியோகிக்கப்படுவதால், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 19.50 கோடி குடும்பங்கள் பயனடையும்.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *