கோவிட் 19 நோயைக் கருத்தில் கொண்டு மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

கோவிட்-19 நோய் மற்றும் அது தொடர்பாக விதிக்கப்பட்ட ஊரடங்கு, அதன் காரணமாக மக்கள் நடமாட்டத்தில் விதிக்கப்பட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக உள்ள நிலைமைகளில் இருந்து பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்பவும், வைரஸ் தொற்று நோயிலிருந்து பழங்குடியின மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அளித்து சிறு வனப் பொருள்கள், வன  விளை பொருள்களை (MFP) வாங்குமாறு மாநில மைய ஒருங்கிணைப்பு முகாம்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று 15 மாநிலங்களின் முதல்வர்களுக்கு மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, மணிப்பூர், நாகாலாந்து, மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிஷா, சட்டீஸ்கர் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பட்டியலினப் பழங்குடியினர் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள வனவாசிகளால் சிறு வன விளைபொருள்கள் மற்றும் மரங்கள் அல்லாத வன விளைபொருள்கள் சேகரிப்பு, அறுவடை, பதப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக ஊரடங்கு காலத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளைத் தளர்த்துவது தொடர்பாக, 16 ஏப்ரல் 2020 தேதியிடப்பட்ட ஆணை எண் 40-3/2020-DM-I(A) dated 16/04/20  மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளிகள் மற்றும் ஏகலைவா மாதிரி தினப் பள்ளிகள் (EMRS & EMDBS), ஆகியவை விடுமுறையை மாற்றியமைத்து 21.3.2020 முதல் 25.5.2020 வரை மூடப்படவேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.  24.3.2020 அன்று அறிவிக்கப்பட்ட முழு அளவிலான ஊரடங்கையடுத்து, இந்தப் பள்ளிகளில் நடைபெறவிருந்த அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக நிறுத்திவிட வேண்டும் என்று மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தன. வாரியத் தேர்வுகளை எழுதும் மாணவர்களும், சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களும், அந்தந்த வளாகங்களில் தகுந்த கவனத்துடன் தங்க வைக்கப்பட வேண்டும். இத்தகைய தேர்வுகளை எழுதும் மாணவர்கள், தேர்வுகள் முடிந்தவுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டு விட வேண்டும். வகுப்புகள் நடைபெறும் கட்டிடங்கள், விடுதிகள், இதர பொதுப் பகுதிகள் உட்பட பள்ளி வளாகங்களை முழுமையாக துப்புரவாக்கி சுத்திகரிப்பு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அமைச்சகம் மேலும் சில முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அவை பின்வருமாறு:

  1. 31 மார்ச் 2020 அன்று வெளியிடப்பட முடியாமல் நிலுவையிலிருந்த தேசிய ஃபெலோஷிப் மற்றும் தேசிய டாப் கிளாஸ் ஸ்காலர்ஷிப் முறைப்படுத்தப்பட்டுவிட்டன.
  2.  பிரி மெட்ரிக் (Pre matric) மற்றும் போஸ்ட் மெட்ரிக்  (Post materic)  மெட்ரிக்குலேசன் படிப்பிற்கு  முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகைகளைப் பொறுத்தவரை அவை பயனாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏதேனும் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில், அதுகுறித்து மாநிலங்கள் அமைச்சகத்துக்கு எழுதலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
  3. தேசிய ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் பெறுவதற்காக, வெளி நாடுகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து, தூதரகங்கள் மூலமாக வரப்பெற்ற வேண்டுகோள்களுக்கு ஸ்காலர்ஷிப் தொகையை அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
  4. TRIFED, – யுனிசெப் உடன் இணைந்து இணையதள கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இதன் மூலம் கோவிட் – 19 நோய் மற்றும் அது தொடர்பான சுகாதார விஷயங்கள் குறித்து வன்தன் விகாஸ் கேந்திரா உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  5. பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் நிதிஉதவி அளிக்கப்படும் பல அரசு சாரா நிறுவனங்கள் NGOக்கள் — ரேஷன் பொருள்களை அளிப்பது, சமைத்த உணவுப் பண்டங்களை விநியோகிப்பது, நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக சுகாதாரச் சேவைகள் அளிப்பது — போன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ஆற்றும் பணிகள் குறித்து பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில், என் ஜி ஓ பிரிவு பக்கத்தில் முகநூல் பக்கத்தில், விவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
  6. அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து NGOகளுக்கும் 2019 – 20 ஆம் ஆண்டுக்கான நிதி, அமைச்சகத்தின் மூலம் வழங்கப்பட்டுவிட்டது. ஏதேனும் குறைகள் இருந்தால், அக்குறைகளுக்கு, என்ஜிஓ போர்டல் மூலமாக தீர்வு காணப்பட்டு வருகிறது.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *