“ஆரோக்கியம்” திட்டத்தின் வாயிலாக “நிலவேம்பு” மற்றும் “கபசுரக்குடிநீர்” இம்ப்காப்ஸ் தலைவர் மரு.ஆர்.கண்ணன்,M.D.(Siddha) நன்றி அறிவிப்பு


“ஆரோக்கியம்” திட்டத்தின் வாயிலாக “நிலவேம்பு” மற்றும் “கபசுரக்குடிநீர்”

வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்திட வழிவகை செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து இம்ப்காப்ஸ் தலைவர் மரு.ஆர்.கண்ணன்,M.D.(Siddha) வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பு.

மத்திய அரசின் ஆயுஷ் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ”ஆரோக்கியம்” என்ற திட்டத்தினை அமுல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டடுள்ளதை 75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள முன்னனி சித்தா,ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகள் தயாரிக்கும் பன்மாநில கூட்டுறவு நிறுவனமான “இம்ப்காப்ஸ்”சார்பில் மற்றும் இம்ப்காப்ஸ் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 16000 சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவர்கள் சார்பிலும் வரவேற்கின்றோம்.

ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் ” நிலவேம்பு” மற்றும் “கபசுரக் குடிநீர் ஆகியவற்றினை மக்களுக்கு வழங்கிடுவதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்திட இயலும் என்று தமிழக பரிந்துரை செய்திருப்பது உண்மையிலேயே மக்களின் நலன் காக்கும் செயலாகும்.

சித்த மருத்துவ தின வளர்ச்சிக்கும் மற்றும் சித்த மருத்துவத்தின் பயன்கள் மக்களை சென்றடையும் விதமாகவும் கடந்த காலங்களில் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் அவர்களும் மாண்புமிகு அம்மா அவர்களும் செயலாற்றி வந்த தமிழ் மக்கள் நன்கறிவர். அந்த வரிசையில் மேற்கண்ட தலைவர்களின் அடியொற்றி செயலாற்றி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பும் அமைந்துள்ளதற்காக சித்த
மருத்துவ உலகம் உங்களுக்கு என்றென்றும் கடமை பட்டுள்ளது என்பதை இச் சமயத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“நிலவேம்பு” மற்றும் “கபசூர குடிநீர் ஆகியவற்றினை சித்த மருத்துவர்களின் பரிந்துரையின் படி பொதுமக்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து அதன்மூலம் “கொரோனா” வைரஸ் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இயலும்.

மேற்கண்ட மக்கள் நலன் காக்கும் நடவடிக்கையினை இந்த நேரத்தில் அறிவித்து செயல்படுத்திய தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசிற்கும் மீண்டும் ஒரு முறை எனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *