கொவிட்-19 பரவலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த டிஜிட்டல் மேற்பார்வை

உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் (Centre for Cellular & Molecular Biology – CCMB) மற்றும், மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியலுக்கான நிறுவனம் ( Institute of Genomics and Integrative Biology – IGIB) ஆகியவை வேறு சில நிறுவனங்களோடு இணைந்து, உயிரியல், தொற்றுநோயியல் மற்றும் நோய் பாதிப்பைப் பற்றிப் புரிந்து கொள்ள, நாவல் கொரோனா வைரஸ் பரவலின் டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு குறித்து பணிபுரிகின்றன.

கொடூரமான நாவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர், எந்த விதமான அறிகுறிகளையோ நோயுற்றத்தன்மையையோ ஏன் வெளிப்படுத்துவதில்லை? சிலர் பெரிதும் பாதிக்கப்பட்டு சாவின் எல்லை வரை செல்லும் போது, சில பேர் எவ்வாறு எந்த பாதிப்பும் இல்லாமல் வைரசின் பாதிப்பில் இருந்து வெளியே வருகிறார்கள்? தடுப்பு மருந்து மற்றும் மருந்துகள் குறித்த நம்முடைய முயற்சிகள் வீணைடையும் அளவுக்கு வைரஸ் வேகமாக மாறி வருகிறதா? அல்லது மாற்றம் முக்கியமற்றதா? இவ்வாறான பல கேள்விகளுக்கு உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றனர்.

நாவல் கொரோனா வைரசின் டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு மூலம், விடை தெரியாத பல கேள்விகளுக்கான துப்பினை விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். IGIBஇல் அமையப் போகும் இந்த மையத்தில், அனைத்து ஆய்வகங்கள், ஆய்வு மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தங்கள் தகவல்களை மேகப் பகிர்தல் மூலம் பகிர்வார்கள்.

வைரஸ், நோயாளி, நோய் சிகிச்சை முறை என்ற மூன்று கட்டங்களில் இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். வைரஸ் அளவிலான கண்காணிப்பு என்பது வைரசின் மரபணுவை குறிக்கிறது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *