ஆயுஷ் சுகாதார பிரிவுகளில் கோவிட் 19 தொற்று தீர்வுகளுக்கான தேடல்


கோவிட்-19 தொற்று நோய்த்தடுப்பிலும் சிகிச்சை மேலாண்மையிலும் ஆயுஷ் இடையீடுகள் / மருந்துகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்காக, குறுகிய கால ஆய்வு திட்டங்களை ஆதரிக்க ஒரு செயல்முறையை ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.

வெளிப்புற (அதாவது, ஆயுஷ் அமைச்சக நிறுவனத்துக்கு வெளியில் இருந்து) ஆய்வு வகையின் கீழ் வரும் இந்த திட்டத்தில் பங்கு கொள்ள கோவிட்-19 பாதிப்புகளின் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகள் / நிறுவனங்கள் அழைக்கப்பட்டன. சார்ஸ்-கோவி-2 நோய்த்தொற்று மற்றும் கோவிட்-19 நோயின் தடுப்பு மற்றும் சிகிச்சை மேலாண்மையில் ஆயுஷ் இடையீடுகள் / மருந்துகளின் பங்கு மற்றும் தாக்கத்தை மதிப்பீடு செய்வது தொடர்பாக‌ இந்த திட்டங்கள் இருக்க வேண்டும்.

அதிகபட்சம் ஆறு மாத கால அளவு கொண்ட, நிறுவன நெறிமுறைகள் குழுவின் ஒப்புதல் உள்ள திட்ட முன்மொழிதல்களுக்கு, ஆயுஷ் மருத்துவர்களை ஈடுபடுத்துதல், தொழில்நுட்ப மனித ஆற்றல், ஆய்வக விசாரணைகள் மற்றும் தொடர்புடைய அவசரத் தேவைகளுக்காக ரூ. 10 லட்சம் வரை நிதி உதவிக்கு பரிசீலிக்கப்படும்.

தகுதி அளவுகோல்கள், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை ஆயுஷ் அமைச்சகத்தின் வலைதளமான ayush.gov.in-இல் பதிவேற்றப்பட்டுள்ளன. https://main.ayush.gov.in/event/mechanism-support-short-term-research-projects-evaluating-impact-ayush-interventions-cum என்பது அந்த வலைப்பக்கத்துக்கான சுட்டி ஆகும்.

மின்னஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். emrayushcovid19@gmail.com என்பது மின்னஞ்சல் முகவரி ஆகும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 01/05/2020

SEARCH FOR SOLUTIONS TO COVID-19 FROM AYUSH HEALTHCARE DISCIPLINES

The Ministry of AYUSH has announced a mechanism to support short-term research projects for evaluating the impact of AYUSH interventions/ medicines in the prophylaxis and clinical management of COVID-19.

Hospitals/Institutions involved in the management of COVID-19 cases have been invited to participate in this scheme which falls under the extramural (i.e., for those from outside the AYUSH Ministry establishment) research category. The proposals should be related to evaluating the role and impact of AYUSH interventions/medicines in the prophylaxis and clinical management of SARS-CoV-2 infection and COVID-19 disease.

Project proposals of a maximum of six months duration with Institutional Ethics Committee (IEC) clearance will be considered for support up to Rs. 10.00 lakhs to meet the expenditure on engaging AYUSH clinicians, technical manpower, laboratory investigations and related contingencies.

The details including eligibility criteria, mode for submission of application, application form are uploaded on Ministry of AYUSH website, ie. ayush.gov.in. The link to the webpage is: https://main.ayush.gov.in/event/mechanism-support-short-term-research-projects-evaluating-impact-ayush-interventions-cum.

The application will be received only through email and the address is: emrayushcovid19@gmail.com.

The last date of receipt of application is 01/05/2020. 

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *