இரத்த சேமிப்பு மற்றும் தன்னார்வ இரத்த தானம் தொடர்பான நடவடிக்கைகள் நியாயமான முறையில் தொடரப்பட வேண்டியது அவசியம்


தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில இரத்த பரிமாற்று குழுமம் இணைந்து 90 அரசு இரத்த வங்கிகளை நிர்வகித்து வருகிறது. இந்த 90 அரசு இரத்த வங்கிகள் மூலம் சுமார் 4 லட்சம் இரத்த அலகுகள், ஒவ்வொரு ஆண்டும் தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் சராசரியாக சுமார் 33,000 இரத்த அலகுகள் ஒவ்வொரு மாதமும் தேவைப்படுகிறது. Covid-19 தொடர்பான விதிமுறைகள் காரணமாக, சாலை விபத்து, அவசரகால சிகிச்சைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் குறைந்து இருப்பதால் இரத்த அலகுகளின் தேவை குறைந்துள்ளது. ஆனால் தலசீமியா நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் இரத்தமாற்றம் தேவைப்படக்கூடிய மோசமான நோயாளிகளுக்கு இரத்த பரிமாற்றம் செய்ய ஒவ்வொரு இரத்த வங்கியும் வழக்கமான தேவையில் 25 சதவீதம் இரத்த அலகுகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.


ஏப்ரல் 14, 2020 நாளிட்ட மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (ஆடீழகுறு). ‘கோவிட் 19-இன் போது அத்தியாவசிய சேவைகள்’ குறித்த மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி இரத்த வங்கியின் சேவைகளை அத்தியாவசியமான கோவிட் அல்லாத சேவைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டு, அனைத்து மாநிலங்களிலும் அனைத்து இரத்த வங்கிகள் மற்றும் இரத்த சேமிப்பு அலகுகள் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே இரத்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த காலகட்டத்தில் இரத்த சேமிப்பு மற்றும் தன்னார்வ இரத்த தானம் தொடர்பான நடவடிக்கைகள் நியாயமான முறையில் தொடரப்பட வேண்டியது அவசியம் என்பதனை கருத்தில் கொண்டு Covid-19 ஆலோசனைகளைப் பின்பற்றி மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்பெறும் தன்னார்வ இரத்த தான முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் முன் எப்பொழுதும் போல் இரத்ததானம் செய்யலாம்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *