கோவிட் -19 தொற்று தடுக்கும் முயற்சியில், புற ஊதா ஒளி கருவி மருத்துவமனைகளைச் சிறப்பாகத் தூய்மைப்படுத்தும்


கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவ மனையின் சுற்றுச்சூழலைத் துரிதமாகத் தூய்மைப்படுத்தும் புற ஊதா ஒளி சார்ந்த  கிருமி நீக்கி வண்டி ஒன்றை, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான ஏஆர்ஐசி , ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவை மெக்கின்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன்  சேர்ந்து உருவாக்கியுள்ளன.

200-300 என்எம் அலை நீளம் கொண்ட புற ஊதா ஒளி, பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளைச் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டதாகும். இதன் மூலம் காற்றிலும், திடப்பொருள்களிலும் உள்ள கிருமிகள் அழிக்கப்படும். மருத்துவமனைகள் மற்றும் பிற மாசுபாடுகளுக்கு உள்ளாகும் சூழல் கொண்ட இடங்களில் உள்ள பாக்டீரியா மற்றும் தொற்றுக்களை அகற்ற ரசாயன கிருமி நீக்கிகள் மட்டும் போதுமானதல்ல. குறைந்த அளவில் படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில், புதிய நோயாளிகளுக்கு படுக்கை வசதி அளிப்பதற்கு, ஏற்கனவே மற்ற நோயாளிகள் பயன்படுத்திய படுக்கைகள் மற்றும் அறைகளை மாசு நீக்கும் நடவடிக்கை பெரும் சவாலாக உள்ளது. மற்ற பாக்டீரியாக்கள் மற்றும் தொற்றுக்களைப் போல கொரோனா தொற்றும் புற ஊதா ஒளிக்கு அடங்கக்கூடியதாகும். 254 என் எம் என்ற உச்சபட்ச செறிவு கொண்ட புற ஊதா ஒளிக் கதிர்வீச்சு, தொற்றின் செல்களை அழித்து, அது மேலும் உருவாகாமல் தடுக்கிறது. கிருமி நீக்குவதற்கான ரசாயன அணுகுமுறைகளைப் போல அல்லாமல், புற ஊதா ஒளி, இயற்பியல் நடைமுறையின் மூலம் சிறந்த முறையிலும், துரிதமாகவும் நுண்ணுயிரிகளைச் செயலிழக்க வைக்கிறது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *