தினமும் 400 பேருக்கு மதிய உணவு/ தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி நண்பர்கள்

கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்கள் தொழில்களை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர் ‌. தினக் கூலிகள் சாலையோர மக்கள் ஆகியோர் தினந்தோறும் உண்ண உணவும் இல்லாமல் தவிக்கின்றனர்.
அவ்வபோது பல்வேறு தன்னார்வலர்கள் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில்
தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி நண்பர்கள் 40 பேர் இணைந்து தங்கள் சொந்த செலவில் தாங்களே உணவை தயாரித்து, தினமும் 400 பேருக்கு மதிய உணவை வழங்கி வருகின்றனர். மேலும் சமூக இடைவெளியில் உணவுகளை வழங்கி வருகின்றனர். கடந்த 30 நாட்களாக உணவு வழங்கியும், ஊரடங்கு முடியும் வரையும் தங்களால் முடிந்த அளவு மதிய உணவை சென்னை பகுதியில் இருக்கும் சாலை வாழ் மக்களுக்கு தருவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *