பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே முழுவதுமாக கொரோனாவை ஒழிக்க முடியும்.” – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…


சென்னை தலைமைச் செயலகத்தில் கரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய, 12 ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது என்றும், “கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு புரியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்”. என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். மேலும்
இத்தாலி, அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே முழுவதுமாக கொரோனாவை ஒழிக்க முடியும்.” என்று கூறியுள்ளார்.

இதில் ஓபிஎஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *