கரோனா வைரஸ் தொற்று இருக்கும் சென்னை, கோவை,திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு குழுக்கள்

கரோனா வைரஸ் தொற்று இருக்கும் சென்னை, கோவை,திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு குழுக்கள் அமைத்து கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், இராயபுரம், திரு.வி.க.நகர், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய ஆறு மண்டலங்களில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதை கருத்திற்கொண்டு, இந்த ஆறு மண்டலங்களில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு களப்பணி குழுவும், மற்ற 9 மண்டலங்களில்,  3 மண்டலத்திற்கு ஒரு களப்பணி குழுவும் நியமிக்கப்படுகிறது.  இந்திய ஆட்சிப் பணி அலுவலர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் அல்லது கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் ஒரு காவல்துறை அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சியை சார்ந்த உயர் அலுவலர் மற்றும் சுகாதாரத் துறையை சார்ந்த ஒரு உயர் அலுவலர் அடங்கிய குழுவாக இக்குழுக்கள் அமைக்கப்படும்.  இது போன்ற ஆறு சிறப்பு குழுக்கள் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கும் அமைக்கப்படும்.  

நோய்த் தொற்று தடுப்புப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவது, அப்பகுதியிலுள்ள குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை உறுதி செய்வது, நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது, இப்பகுதிகளில் நோய் தொற்றுக்கான சோதனையை தீவிரப்படுத்தி, விரைவாக அதன் முடிவுகளை பெறுவது உள்ளிட்டவை, இக்குழுக்களின் முக்கிய பணிகளாகும்.  இதன் மூலம் நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.
திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *