“உழைப்போரே உயர்ந்தவர்” அதிமுக மே வாழ்த்து செய்தி…


கழக ஒருங்கிணைப்பாளர்
தமிழ் நாடு துணை முதலமைச்சர்
ஓ. பன்னீர்செல்வம்,
கழக இணை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் நாடு முதலமைச்சர்
எடப்பாடி K. பழனிசாமி
ஆகியோரின் `மே தின’ வாழ்த்துச் செய்தி

உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் மே' தின நன்னாளில், தொழிலாளர்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்தமே தின’ வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
அநீதிகளையும், எளியோரை வலியோர் அடக்கி ஆளும் கொடுமைகளையும் எதிர்த்து நடைபெற்ற தொழிலாளர் புரட்சியில் பூத்திட்ட நறுமலர் தான் இந்த மே' தினம். உழைப்பவர்களின் மனித மாண்பையும், உரிமைகளையும் நிலைநாட்ட 1886-ஆம் ஆண்டு, மே மாதம் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர்கள் மேற்கொண்ட பேரணி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிர்த் தியாகம் செய்து, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் நினைவாக உழைப்போர் அனைவருக்கும் நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவிக்கும் நன்நாளாம் மே தினத்தில் ``உழைப்போரே உயர்ந்தவர்'' என்று உரக்கச் சொல்லி, எங்கள் வாழ்த்துகளையும், வணக்கங்களையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். கொடிய நோய்த் தொற்றால் அல்லல்படும் இன்றைய உலகம், நாளை உற்சாகத்துடன் வீருகொண்டு எழுந்து, புதியதோர் உலகம் செய்யப்போவது உழைப்பாளர்களின் உழைப்பினாலேயே ஆகும். உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்தமே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் இதய தெய்வம் மண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு அவர்கள் தங்கள் வாழ்வில் வளம்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் காட்டினார்கள்.
அந்த வகையில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் குடும்பநல நிதியுதவி வழங்கி சிறப்பித்து வந்துள்ளார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகள் நீங்கியவுடன், கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த, தேர்ந்தெடுக்கப்படும் நலிந்த தொழிலாளர்களுக்கான குடும்பநல நிதியுதவி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *