வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் – தமிழக அரசு.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்கள் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


தாயகம் திரும்ப விரும்புவோரை அறியவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக
தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் வகையில்
எண்ணிக்கையினை அறியும் நோக்கிலும், தமிழ்நாட்டிற்குத்
திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்தியும், அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *