தமிழகத்தில் கொரோனா நிலவரம்

சென்னையில் இன்று மட்டும் 138 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,323 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 48 பேர் மீண்ட நிலையில் இதுவரை 1,258 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் இன்று யாரும் உயிரிழக்காத நிலையில் பலி எண்ணிக்கை 27-ஆகவே உள்ளது

தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 161 பேரில் 8 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 9,787 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்கள் அதிகரித்துள்ளது. நேற்று ஆரஞ்சு மண்டலமாக இருந்த ராணிப்பேட்டை இன்று சிவப்பு மண்டலமாக மாறியது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *