முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை பொது மக்கள் வழங்கிய மொத்த தொகை 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 1.5.2020

தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 20.4.2020 அன்று வரை, மொத்தம் 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் வரப்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 21.4.2020 முதல் 30.4.2020 ஆகிய பத்து நாட்களில்

10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

 • அசோக் லேலண்ட் நிறுவனம் மற்றும் ஹிந்துஜா லேலண்ட் நிறுவனம் 2 கோடியே 75 லட்சம்
 • பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 67 ரூபாய்
 • தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் 1 கோடியே 2 லட்சத்து 88 ஆயிரத்து 66 ரூபாய்
 • திரு. வி.ஆர் வெங்கடாசலம் 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய்
 • டி. வி எஸ் ஸ்ரீ சக்கரா லிமிடெட் 1 கோடி ரூபாய்
 • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒரு மாத சம்பளம் 97 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்
 • சேஷசாயி பேப்பர் அண்டு போர்ட்ஸ் லிமிடெட் 62 லட்சம் ரூபாய்
 • ஜி.ஆர் தங்கமாளிகை 54 லட்சத்து 1 ஆயிரத்து 826 ரூபாய்
 • மேட்ரிமோனி டாட் காம் 50 லட்சம் ரூபாய்
 • வ.உ சி துறைமுகம் ரூபாய்
  தூத்துக்குடி 50 லட்சம்
 • தமிழ்நாடு கோழி முட்டை பண்ணை விவசாயிகள் மற்றும் விற்பனை சங்கம் 50 லட்சம் ரூபாய் சங்கீதா கல்யாண மண்டபம் 50 லட்சம் ரூபாய்
 • சுந்தரம் இண்டஸ்ரீஸ் 50 லட்சம் ரூபாய்
 • டி.வி.எஸ் நோவோடெமா எலஸ்டோமெரிக் எஞ்சினியர் 50 லட்சம் ரூபாய்
 • அறம் மக்கள் நலச் சங்கம் 50 லட்சம் ரூபாய்
 • மேசி அறக்கட்டளை நிறுவனம் 50 லட்சம் ரூபாய்
 • இயக்குனர், நாகா லிமிடெட் 50 லட்சம் ரூபாய்
 • விநாயகா மிஷன் 50 லட்சம் ரூபாய்
 • மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்டம் 32 லட்சத்து 37 ஆயிரத்து ரூபாய்
 • டி.வி.எஸ் சுந்தரம் 25 லட்சம் ரூபாய்
 • இன்கோசர்வ் நிறுவனம் 25 லட்சம் ரூபாய்
 • டி.வி.எஸ் சப்ளை செயின் சொலூஷன் லிமிடெட், 25 லட்சம் ரூபாய்
 • டவர்ஸ் கிளப் உறுப்பினர்கள், அண்ணா நகர் 25 லட்சம் ரூபாய்
 • பி.எஸ்.டி என்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் 25 லட்சம் ரூபாய்
 • தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் 25 லட்சம் ரூபாய்
 • கல்ப் ஆயில் லூப்ரிகண்ட்ஸ் 25 லட்சம் ரூபாய்
 • SWELECT எனர்ஜி சிஸ்டம் 25 லட்சம் ரூபாய்
 • சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் (ம) கழிவு நீர் அகற்று வாரியம் 20
  லட்சம் ரூபாய்

*ஸ்ரீ வள்ளி விலாஸ் சன்ஸ் 15 லட்சம் ரூபாய்

 • பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் 15 லட்சம் ரூபாய்
 • பி.எஸ்.என்.ஏ கல்லூரி, திண்டுக்கல் 13 லட்சம் ரூபாய்
 • ஸ்ரீ சண்முகவேல் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
 • சுதன் ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
 • பொன்னி சுகர்ஸ் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
 • ஸ்ரீ வரலட்சுமி கம்பெனி 10 லட்சம் ரூபாய்
 • திருச்செங்கோடு வட்டம் கொங்கு வேளாளர்கள் 10 லட்சம் ரூபாய்
 • டாக்டர் ஏ. நீதிநாதன் அவர்கள் 10 லட்சம் ரூபாய்
 • தி டையோசிஸ் ஆப் செங்கல்பட்டு சொசைட்டி 10 லட்சம் ரூபாய்
 • ஹீட் அண்ட் கன்ட்ரோல், சவுத் ஆசியா பிரைவேட் லிட் 10 லட்சம் ரூபாய்
 • திரு. P.L.A பழனியப்பன் 10 லட்சம் ரூபாய்
 • தி பிரிகேடு ஸ்கூல் J.P நகர் 10 லட்சம் ரூபாய்
 • கே. ராஜகோபாலன் அண்டு கோ 10 லட்சம் ரூபாய்
 • திரு. சி. சுப்பையா செட்டியார் 10 லட்சத்து ஒரு ரூபாய்
 • பைப் ஹேங்கர்ஸ் & சப்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
 • Pioneer Jellice இந்தியா பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்

மேற்கண்ட பத்து நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 145 கோடியே லட்சத்து 35 ஆயிரத்து 986 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய் ஆகும். இதுவரை பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பத்து லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், சிறுகச் சிறுக சேமித்த தங்கள் பணத்தை மனமுவந்து அளித்த பொதுமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொண்டார்.

மேலும், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக, தங்களது ஒரு நாள் ஊதியமான 110 கோடி ரூபாயை மனமுவந்து அளித்த தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இதைத் தவிர, லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் 4 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை
ரோட்டரி மாவட்ட ஆளுநர், சென்னை 3 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை பெப்சிகோ நிறுவனம் மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் சார்பில் திரிசூலம், திருநீர்மலை, அனகாபுத்தூர், பம்மல் மற்றும் பல்லாவரம் ஆகிய கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு முப்பது நாட்களுக்கு சுமார் 2 கோடி ரூபாய் செலவில், 2000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, அஸ்ட்ரா ஜெனிகா இந்தியா பிரைவேட் லிமிடெட் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வாங்க; எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *