தேவநேயப் பாவாணரின் 118வது பிறந்தநாள் விழா!


Birth anniversary of Thiru Devaneya Pavanar

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக தமிழ்க் கலைக்கழகத்தின் 55வது கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளான 07.02.2020 அன்று நடைபெறுகிறது. முற்பகல் தமிழ்க் கலைக்கழகக் கூட்டமும் பிற்பகல் 2 மணி அளவில் தேவநேயப் பாவாணரின் பிறந்த நாள் விழாவும், 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விருது பெற்ற தமிழ்க் கலைக்கழகத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களாகிய புலவர் வெற்றியழகனார்(கபிலர் விருது), திரு. அ. மதிவாணன் (மொழியாக்க வல்லுநர் விருது), பேராசிரியர் நா.சு.சிதம்பரம்(அறிவியல் எழுத்தாளர் விருது) ஆகியோருக்கு பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் திரு. தங்க. காமராசு தலைமை ஏற்க, மக்கள் தொலைக்காட்சி முதன்மைச் செய்தி ஆசிரியர் திரு. கூ. பாஸ்கரசந்திரன் அவர்களும், மக்கள் இந்திய ஆட்சிப்பணிக் கழகத்தின் இயக்குநர் திரு. மு. சிபிகுமரன் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகவும், செய்தி 7 (நியூஸ்7) தமிழ்த் தொலைக்காட்சியின் முதன்மை நெறியாளர் திரு. இரா. விஜயன் அவர்கள் சிறப்பு நோக்கராகவும், தமிழ்க் கலைக்கழகத்தின் மதிப்புறு உறுப்பினர்கள், அலுவல்சார், அலுவல்சாரா உறுப்பினர்கள் மற்றும் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பார்வையாளராகவும் பங்கேற்கவுள்ள இக்கூட்டத்தில் 550 கலைச்சொற்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *