மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதியை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்- டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு…


3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதியை இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதுடன், அதில் சலுகைகளையும் அறிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

வீடுகளுக்கு கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் முதல் 100 யூனிட் மின்சாரம் 200 யூனிட் ஆக மாற்றி அமைக்க வேண்டும்.
அதனடிப்படையிலேயே மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு ஓரளவுக்கு சுமை குறையும். மேலும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் இதுபோன்றதொரு மின் கட்டணம் சலுகை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *