அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம், அடித்தட்டு மக்களுக்கு இந்த கட்டண வசூல் மேலும் சிரமத்தையே தரும்- TTV தினகரன் டிவிட்டர் பதிவு


மே 17 ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இலவசமாக உணவு அளிக்கப்பட்டுவந்த அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் தவிர வேறு எந்த உதவியும் கிடைக்காத ஏழை எளிய, அடித்தட்டு மக்களுக்கு இந்த கட்டண வசூல் மேலும் சிரமத்தையே தரும்.

அம்மா உணவகத்துக்கு நிதி தருவதுபோல நாடகமாடி ஏழைகளின் பசியை அரசியலுக்காகப் பயன்படுத்த நினைத்த அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இப்போது வாய்மூடி மௌனியாக இருப்பது அந்த இருவரையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி இருக்கிறது.

இந்த அரசியலை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, ஊரடங்கு காலம் முடியும் வரையிலாவது அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க தமிழக அரசு இன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *