புகையிலைப் பொருள்களின் அட்டைகள் மீது தெளிவான புதிய சுகாதார எச்சரிக்கை.


சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அனைத்து புகையிலைப்  பொருள்களின் அட்டைகளிலும் வெளியிடப்படவேண்டிய தெளிவான புது முறை சுகாதார எச்சரிக்கைகளை இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலைப் பொருள்கள் (கட்டுதல் மற்றும் வில்லைகளை ஒட்டுதல்) சட்டங்கள், 2008க்கு பார்வை GSR 248(E) 13 ஏப்ரல், 2020 தேதியிட்ட “சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலைப் பொருள்கள் (கட்டுதல் மற்றும் வில்லைகளை ஒட்டுதல்) சட்டத் திருத்தங்கள், 2020” என்ற திருத்தத்தின் மூலம் இது செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிகள் 1 செப்டம்பர், 2020 முதல் அமலுக்கு வரும்.

புதிய வகையிலான சுகாதார எச்சரிக்கைகள் வருமாறு-

(அ) படம்-1, 1 செப்டம்பர், 2020ல் அதன் தொடக்கத்தை தொடர்ந்து பன்னிரெண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

படம்-1

(ஆ)  படம்-2, படம்-1ன் குறிப்பிட்ட சுகாதார எச்சரிக்கை தொடங்கிய நாளில் இருந்து பன்னிரெண்டாம் மாதத்தின் முடிவில் அமலுக்கு வரும்.

படம்-2

குறிப்பிட்ட அறிவிக்கை சுகாதார எச்சரிக்கைகளுடன் கூடிய மென் அல்லது அச்சிடக்கூடிய வடிவத்தில் 19 மொழிகளில் www.mohfw.gov.in  மற்றும்  www.ntcp.nhp.gov.in ஆகிய வலைதளங்களில் கிடைக்கும்.

மேற்கண்டவற்றை கருத்தில் கொண்டு, இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது;

* செப்டம்பர் 1, 2020 அன்றோ அல்லது அதற்கு பிறகோ தயாரிக்கப்படும்,  இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக் செய்யப்படும் அனைத்து புகையிலைப் பொருள்களும் படம்-1ஐக் காட்சிப்படுத்த வேண்டும்.  செப்டம்பர் 1, 2021 அன்றோ அல்லது அதற்கு பிறகோ தயாரிக்கப்படும்,  இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக் செய்யப்படும் அனைத்து புகையிலைப் பொருள்களும் படம்-2ஐக் காட்சிப்படுத்த வேண்டும்.

* சிகரெட்டு அல்லது எந்த புகையிலைப் பொருள்களின் தயாரிப்பு, உற்பத்தி, போக்குவரத்து, இறக்குமதி அல்லது விநியோகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள எந்த நபரும், அனைத்து புகையிலைப் பொருள் கட்டுகளும் குறிப்பிட்ட சுகாதார எச்சரிக்கைகளை துல்லியமாக காட்சிப்படுத்தியுள்ளதை உறுதி செய்யவேண்டும்.

* மேற்கண்ட விதியை மீறுதல் சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலைப் பொருள்கள் (விளம்பரத் தடை மற்றும் விற்பனை மற்றும் வணிகம், தயாரிப்பு,  போக்குவரத்து மற்றும் விநியோகக் ஒழுங்குமுறை) சட்டம், 2003இன் இருபதாவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கக்கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும்,

* சட்டம் மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்ப ‘பேக்கேஜ்’ என்பதற்கான விளக்கம் திருத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *