அம்மா மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம்.


சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில், சென்னை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், சென்னை மாநகரில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார்.

பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காகவும், இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் J.K. திரிபாதி, இ.கா.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., வருவாய் நிர்வாக ஆணையர் , முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராஜேந்திர குமார், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.ஏ.கே. விஸ்வநாதன், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *