ஜூன் மாதத்திற்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் -தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.


சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில், சென்னை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை…

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். என் தலைமையில் 14 முறை ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுவும் ஆலோசனை நடத்தியுள்ளன. 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனைக் குழுக்களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 வேளையும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
அதிக மக்கள் கொண்ட பகுதி என்பதால் சென்னையில் வேகமாக கொரோனா தொற்று பரவுகிறது.
தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

50 பரிசோதனை மையங்கள் மூலம் நாள்தோறும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
அம்மா உணவகம் மூலமாக நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறோம்.
ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நியாயவிலைக் கடைகள் மூலம் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது.
அதன் படி, ஜூன் மாதத்துக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் அளிக்கப்படும்.

சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் மக்கள் பிரச்னைகளை அறிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பிரச்னை என்றால், அவை உடனடியாக சரி செய்யப்படவுள்ளது.
அந்தக் கட்டுப்பாட்டு அறையில் மருத்துவர்களும் உள்ளனர். அவர்கள் ஆலோசனை வழங்கவுள்ளார்கள். சென்னை மாநகராட்சியில் ஏதேனும் பிரச்னை இருந்தால் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படுகிறது. நடமாடும் வாகனம் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று பரிசோதனை செய்யப்படுகிறது.*
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சில தொழில்களை மேற்கொள்ள தமிழகத்தில் அனுமதி வழங்க பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு சிங் மற்றும் சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து சுமார் 50 ஆயரம் வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு தங்கி பணியாற்றி வருகிறார்கள். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த தேதிகளில் ரயில்கள் இயக்கப்படும் என்று அவர்களுக்கு தனித்தனியாக அறிவுறுத்தப்பட்டு, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளும்.
வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய விரும்பினால் பணி செய்யலாம்.
பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவித்துவரும், முகமூடி அணிதல் சமூக விலை கடை பிடித்து கடைகளில் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.
சோப் போட்டு கைகளை கழுவ வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். காய்கறிக் கடைகளுக்கு என எங்கு சென்றாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைப் பின்பற்றினால், கரோனா தொற்றை எதிர்த்து வெல்லலாம்” என்றார்.
அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை கண்டிப்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *