தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தடை உத்தரவு காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் அமைச்சர் ஆர் வி உதயகுமார் விளக்கம்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு 2.5.2020 அன்று வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொரோனா தடை உத்தரவு காலத்தில் எவ்வாறு செயல்படலாம் என விரிவான உத்தரவினை வழங்கியுள்ளார்கள்.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு வரை கீழ்காணும் வழிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

பெருநகர சென்னை
காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகவல்
தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT
& ITes) : 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற
பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர Except Containment Zones)

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT & ITes) : 50 சதவிகிதம் பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

பணியிடங்களில் அனைத்து பணியாளர்களுக்கும்
கை கழுவுதல், காய்ச்சல்
பரிசோதனை, கிரிமிநாசி தெளித்தல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்தல் வேண்டும். பணியாளர்களுக்கு 1 மருத்துவர் என உறுதி செய்தல் வேண்டும்.

அறைகறைகளில் 1 மீட்டர் இடைவெளியில் பெட் போன்ற தூங்கு வசதி பகரணங்களை அமைத்தல் வேண்டும்.

கிரிமிநாசியினை இருமுறை தெளித்தல் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் கிரிமிநாசினியை வைத்திருத்தல் வேண்டும். இது குறித்து தொடர்புடைய அலுவலர்கள் அவ்வப்பொழுது ஆய்வு செய்தல் வேண்டும்.

பணி நேர மாற்றம் போது (Shift ) ஒரு Shift க்கும் அடுத்த Shiftக்கும் இடையில்

பணியாளர்கள் ஒன்று சேர்வதை தவிர்க்கும் வகையில் 30நிமிட இடைவெளிஇருக்கும் மாறு பணிநேரத்தை அமைத்தல் வேண்டும்.

55 வயதிற்குட்பட்ட பணியாளர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற ஏற்பாடு செய்தல் வேண்டும்.

பணியாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கோவிட்-19 வைரஸ் தொற்றினை சரிசெய்யும் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் விவரங்களை

பணியாளர்களுக்கு தெரியும் வகையில் வைத்திருத்தல் வேண்டும்.

நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், சுவாசம் தொடர்பான நோய்களை முகாம்களை நடத்தி கண்டறிதல் அவசியம்.

மருத்துவ அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு உறுதிசெய்தல் அவசியம்.

பொதுவாக கோவிட் 19 வைரஸ் தொற்றினை மேலும் பரவாமல் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள்
வழங்குதல் வேண்டும்.

அனைத்து பணியாளர்களும் கோவிட்-19 வைரஸ்
தொற்றிலிருந்து
பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கைகளை கழுவுதல், சுவாசபயிற்சி, சமூக
இடைவெளி, சுற்றுப்புற சுகாதார நடத்தைகளை சுய பாதுகாப்பு ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தல் வேண்டும்.

200 முதல் 1000 பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மருத்துவர் ஆய்வு செய்தல் வேண்டும்.

1000 பணியாளர்களுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் ஒவ்வொரு நாளும் மருத்துவர் வருவதை உறுதி செய்தல் வேண்டும்.

வெளியிலிருந்து வரும் அலுவலக பணியாளர்களுக்கு வாகன போக்குவரத்து வசதியினை நிறுவனம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

வாகனத்தில் 50 சதவிகித அளவிற்கு மட்டுமே பணியாளர்கள் அனுமதித்தல்

Gausior Qb. (Full capacity not allowed)

கார் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்களில் ஓட்டுநர் தவிர இருவரை மட்டுமே
அனுமதித்தல் வேண்டும்.

இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

அலுவலகத்தில் நுழையும் அனைத்து வாகனங்களும் லைசால் கிரிமிநாசி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.

வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைகழுவும் கிரிமிநாசி கொண்டு அடிக்கடி தாய்மை படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.

பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் கிரிமிநாசியினை தெளித்து தூய்மை படுத்துதல் வேண்டும்.

அலுவலகத்தின் நுழைவுவாயில், உணவு அருந்தும் இடம், வெளியே செல்லும் வழி, கூட்டரங்கம், திறந்வெளி, அலுவலர்கள் அறைகள், உபகரணங்கள் மற்றும் மின் தூக்கி, கை அலம்பும் இடம், கழிப்பறை, குடிநீர் அருந்தும் இடம், சுற்றுச்சுவர் ஆகிய இடங்களில் கிரிமிநாசினி தெளித்தல் வேண்டும்.

அலுவலக கட்டிடத்தில் பணியாளர்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சுவர்கள் ஆகியவற்றை இருமுறை கிருமி நாசினி தெளித்து துடைக்க வேண்டும்.

அலுவலக தரைப்பகுதி தூய்மை செய்தல், அலுவலக பணியாளர்கள் முக கவசம்
அணிதல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்களுக்கு தேவையான
முககவசம் வழங்க வேண்டும்.

பணியாளர்களுக்கு Infra Red தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்பநிலையை கண்டறிய
வேண்டும்.

சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் ஆகிய

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிடும் அனைத்து அறிவுரைகளையும் தவறாது
கடைபிடிக்க வேண்டும்.

நிறுவனத்தின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா மூலம் நோய் பரவலை
Tracking contacts) கண்காணித்தல் வேண்டும்.

தேவையற்ற பார்வையாளர்களை அனுமதி கூடாது

உணவு அருந்தும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் ஒருமுறை பயன்படும் தட்டுகளை உபயோகப்படுத்துதல் வேண்டும்.

மின் தூக்கிகளில் அதிகபட்சமாக 2 முதல் 4 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடியவரையில் படிக்கட்டுகளை பயன்படுத்த அறிவுரை வழங்குதல் வேண்டும்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *