கோவிட்-19 தொடர்பான பொதுமக்கள் குறைதீர்ப்பு குறித்த, மார்ச் 30 முதல் மே 4 , 2020 வரையிலான காலத்திற்கான அறிக்கையை, 8 மாநிலங்கள் மற்றும் ஒன்பது யூனியன் பிரதேசங்களுடன் டாக்டர் ஜிதேந்திரசிங் பரிசீலனை செய்தார்மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறையின் இணை அமைச்சர் டாக்டர் ஜீதேந்திர சிங் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கோவிட்-19 பற்றிய பொதுமக்கள் குறைதீர்ப்பு குறித்த மார்ச் 30 முதல் மே 4, 2020 வரையிலான காலத்திற்கான அறிக்கையை பரிசீலனை செய்து, குறைகளுக்குth தீர்வு காணப்படும் காலம் குறித்து திருப்தி தெரிவித்தார்.

இந்தக் காலத்தில், DARPG யின் கோவிட்-19 தொடர்பான தேசிய பொதுமக்கள் குறைதீர்ப்புக் கண்காணிப்பு (https://darpg.gov.in) மூலம் 52,327 குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டன. இதில் 41,626 குறைகளுக்கு மத்திய அமைச்சகங்கள்,. துறைகள் மூலமாகத் தீர்வு காணப்பட்டன. மத்திய அரசின் கோவிட்-19 பொதுமக்கள் குறைதீர்ப்புக்கான காலம் சராசரியாக 1.45 நாட்களாக உள்ளது.  இதில் 20000 குறைகளை DARPG மனித சக்தி கொண்டு ஆய்வு செய்து குடிமக்கள் திருப்தியை உறுதிப்படுத்துவதற்காக பின்னூட்டம் தரும்படி அவர்களுக்கு அழைப்பும் விடுத்தது

மத்திய மாநில அரசுகளின் குறைதீர்ப்பு அதிகாரிகளுடன் ஆறு சுற்று காணொளி மாநாடுகள் நடத்தப்பட்டன.  DARPGயிலிருந்து 10,701 குறைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டன. அக்குறைகளுக்கு வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டு விட்டது. கோவிட்-19 தொடர்பான பொதுமக்கள் குறைகளுக்கு, காலத்தே தீர்வு காண்பதில், மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியமைக்காக DARPGயிலும், மாநில அரசுகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு, டாக்டர் ஜிதேந்திர சிங் நன்றி தெரிவித்தார்

கோவிட்-19 குறைகளுக்கு என தனியான இணைய தளங்கள் வைத்துள்ள, உத்திரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், ஹரியானா, கேரளா போன்ற தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த மாநிலங்களில் மட்டுமல்லாமல் தகவல் தொடர்பு வசதிகள் அதிக அளவில் இல்லாத வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், லடாக், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களிலும் கோவிட்- 19 தொடர்பான பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்வு காண வகை செய்யப்பட்டது. இதுபோல் பொதுமக்கள் குறைகளுக்கு காலத்தே தீர்வு காணப்படுவது, பொதுமக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையைத் தொடர்ந்து நீடிக்கச் செய்கிறது

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *