சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்ததை அடுத்து சென்னையில் வணிகத்திற்காக தனிக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டது


இன்று முதல் சென்னையில் தனி கடைகளை திறக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியதை அடுத்து சென்னை பாண்டிபஜாரில் ஜவுளி, மென்பொருள், அலைபேசி, பேன்ஸி உள்ளிட்ட கடைகள் வியாபாரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ள அனைத்து தனி கடைகளும் புதன்கிழமை முதல் திறக்க மாநகராட்சி அனுமதி அளித்ததன் அடிப்படையில் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களான மின்னணு சாதனங்கள், கட்டுமான பொருட்கள், ஜவுளி, போன்ற சிலவற்றை நேர கட்டுப்பாட்டுடன் விற்பனை செய்ய மாநகராட்சி அனுமதி அளித்தது. இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ள கடைகள் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடைகளில் ஏசியை பயன் படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திறக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளிலும் குளிர்சாதனங்கள் பயன்படுத்துவது இல்லை என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கடைகளின் ஒட்டியுள்ளனர். மேலும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தீவிர கொரோனா பரிசோதனைக்கு பின்பே கடைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *