கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய்.


கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள்.

தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள், மற்றும் பொது மக்களிடமிருந்து 30.4.2020 அன்று வரை, மொத்தம் 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து
558 ரூபாய் வரப்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 1.5.2020 முதல் 5.5.2020 வரை ஆகிய ஐந்து நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

 • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 20 கோடி ரூபாய்
 • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 5 கோடி ரூபாய்
 • எம்.ஆர். எப் பவுண்டேஷன் 4 கோடி ரூபாய்
 • அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 3 கோடியே 70 லட்சம் ரூபாய்
 • இந்தியன் வங்கி 1 கோடி ரூபாய்
 • எச்.வி.எப் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சார்பாக
 • 66 லட்சத்து 67 ஆயிரத்து 470 ரூபாய்
 • தமிழ்நாடு கிராம வங்கி 25 லட்சத்து 38 ஆயிரத்து 514 ரூபாய்
 • மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் 15 லட்சத்து 89 ஆயிரம் 535 ரூபாய்
 • தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை முதுநிலை பொறியாளர்கள் சங்கம் 15 லட்சத்து 78 ஆயிரத்து 708 ரூபாய்
 • மோபிஷ் இந்தியா பவுண்டேஷன் 15 லட்சம் ரூபாய்
 • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 14 லட்சத்து 65 ஆயிரத்து 999 ரூபாய்
 • திருவாவடுதுறை ஆதீன கர்த்தார் 12 லட்சம் ரூபாய்
 • ராயின் 10 லட்சம் ரூபாய்
 • கோனே எலிவேட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
 • பிரிமியர் பைன் லைன்ஸ் பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
 • Stahli இந்தியா பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
 • ஸ்ரீ சந்தான கிருஷ்ண சில்க்ஸ் 10 லட்சம் ரூபாய்


மேற்கண்ட ஐந்து நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 41 கோடியே 34 லட்சத்து 4 ஆயிரத்து
882 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை
347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய் ஆகும்.
மேற்கண்ட நாட்களில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பத்து லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், சிறுகச் சிறுக சேமித்த தங்கள் பணத்தை மனமுவந்து அளித்த பொது மக்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக, தங்களது ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து அளித்த அனைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *