வயது வாரியாக மது விற்பனை செய்ய உத்தரவு


வருகிற மே 7ஆம் தேதி,  அதாவது நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா   ஊரடங்கை   முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடலாம் என பல்வேறு தரப்பில்  கோரப்பட்ட  நிலையில் இந்த அறிவிப்பு கவலையையும் வேதனையையும்  அளிக்கிறது.

இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, வயது வாரியாக மது விற்பனை செய்ய உத்தரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மது விற்பனை செய்யலாம்

| 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு | மதியம் ஒரு மணி முதல் மதியம் 3 மணி வரை மது வாங்கிக் கொள்ளலாம்

40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானம் வாங்கிக் கொள்ள வேண்டும்

நாளை முதல் மதுபானக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்கள் வெளியீடு.

ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு.

ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.

கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும்.

கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவு.

*அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க உத்தரவு.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *