பயப்பட வேண்டாம்!…


கொரோனா வைரஸ் நோயைக்கண்டு வீணாக பதட்டமடைய வேண்டாம். அதே நேரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஊடகங்களில் பரவி வரும் உண்மைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையில்லாத செய்திகளைக் கண்டு குழப்பமடைய வேண்டாம். மேலும் அத்தகைய செய்திகளை மற்றவர்களுக்கு பரிமாறுதலையும் தவிர்க்க வேண்டும்.

அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஆரோக்கியத்திற்கான முன்னெச்சரிக்கை அவசியம்.

தாங்கள் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு சென்றிருந்தாலோ அல்லது அங்கிருந்து திரும்பி வந்த வைரஸ் நோய் தொற்றுள்ள நபரிடம் தொடர்பில் இருந்திருந்தாலோ, 14 நாட்களுக்கு வெளியில் செல்லாமல் வீட்டின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

உங்களைத் தனிமைப்படுத்துதல் எங்கள் நோக்கம் அல்ல, மாறாக உங்கள் நலம் பேணுவதே எங்கள் நோக்கம்.

உங்களை தற்காத்துக் கொள்ள இருமல், தும்மல் உள்ளவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக்கழுவ வேண்டும்.

கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாயை தொடுவதைத் தவிர்க்கவும்.

இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ளவும்.

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து கடைக்குச் சென்று மருந்து வாங்கி உண்பதும் அல்லது தாமாகவே சுய வைத்தியம் செய்து கொள்வதும் ஆபத்தில் முடியலாம்.

கொரோனாவை துணிவோடு எதிர்கொள்ளத் தயாராவோம்

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *