வேதா இல்லம் அரசு நினைவிடமாக்க நில எடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.


அரசு வெளியிட்டுள்ள விளம்பர செய்தியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு நினைவிடமாக மாற்ற அரசு ஒப்புதல் வழங்கி, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என வெளியிட்டுள்ளது.


தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மறைந்தார். சென்னையில் அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாகப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலிதாவின் உறவினரான தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சசிகலா தரப்பில் தினகரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மேலும் தீபா வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வசித்துவந்த வேதா இல்லம் அமைந்துள்ள நிலம் கையகப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும் அந்த நிலத்தை கையகப்படுத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள நிலத்திற்கு அடியில் எந்தவிதமான கனிம வளங்களும் சுரங்கங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *