பொது முடக்கத்தின் போது கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்த பின்பும் இந்திய உணவுக் கழகத்தில் போதிய அளவுக்கு சரக்குகள் உள்ளன: ராம் விலாஸ் பஸ்வான்

அரசால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், அரசிடம் இருக்கும் உணவு தானியங்கள் மற்றும் பருப்புகளின் கையிருப்பு மற்றும் மாநிலங்களுக்கு இது வரை அனுப்பப்பட்ட சரக்குகளின் விவரங்கள் குறித்த விரிவான தகவல்களை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர், திரு. ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

04.05.2020 தேதியிட்ட தகவல் அறிக்கையின் படி, 276.61 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 353.49 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் இந்திய உணவுக் கழகத்திடம் தற்போது உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். மொத்தமாக 630.10 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய சரக்குகள் கையிருப்பில் உள்ளன. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் ஒரு மாதத்துக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன.

2483 ரயில் அடுக்குகள் மூலம் 69.52 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து எடுத்து செல்லப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். ரயில் மார்க்கத்தைத் தவிர, சாலைகள் மற்றும் நீர்வழிகள் மூலமாகவும் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. 137.62 லட்சம் மெட்ரிக் டன்கள் மொத்தத்தில் எடுத்து செல்லப்பட்டன. 5.92 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் வட கிழக்கு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

“பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின்” கீழ், மொத்தமாக 104.4 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் 15.6 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் அடுத்த 3 மாதங்களுக்குத் தேவைப்படும் நிலையில், 59.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 8.14 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *