புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ மறுவாழ்விற்கான உணர்ச்சி செயலாக்கம் மற்றும் மேம்பாட்டு சிகிச்சை பயிற்சி பெட்டகம் வழங்குதல்- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

தமிழ்நாட்டில் 19 ஆரம்பகால பயிற்சி மையங்களில் 500 புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. புற உலக சிந்தனையற்ற குழந்தைகள் ஒளி, சத்தம் மற்றும் தொடுதலுக்கு மிகுந்த உணர்திறன் அல்லது குறைந்த உணர்திறன் கொண்டவர்கள், அவர்களுக்கு தொடர்ச்சியான உணர்திறன் செயலாக்கம் மற்றும் மேம்பாட்டு சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும், தற்போது பரவிவரும் COVID-19 தொற்று நோய் காரணமாக அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது இக்குழந்தைகளை, இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வீட்டிற்குள்ளே வைத்து பராமரிப்பது கடினம்

புற உலக சிந்தனையற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக வீட்டிலேயே வைத்து பயன்படுத்தும் வகையில், உணர்திறன் செயலாக்கம் மற்றும் மேம்பாட்டு மருத்துவ மறுவாழ்விற்கான பயிற்சி வழங்கிடுவதற்காக பந்து, விசில், டார்ச் லைட், நுரைக்குமிழ் லிங்க் இணைப்பு) / கட்டுமான தொகுதிகள், பாசிமணி (BDxla) கரையான்கள் உள்ளிட்ட 11 வகையான பயிற்சி பொருட்களும் 2 வகையான சிறப்பு உணவு பொருட்களும் உள்ளடக்கிய சிறப்பு மறுவாழ்வு பயிற்சி பெட்டகம் பெற்றோர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்டு 19 மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியின் விளைவாக, புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கு சிறந்த கவனம் செலுத்துதல், மேம்பட்ட நடவடிக்கை மற்றும் பதட்டத்தைக் குறைக்க இயலும். இந்த சிறப்பு மறுவாழ்வு பயிற்சி பெட்டகம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மூலம் தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு மறுவாழ்வு பயிற்சி பெட்டகம் விலை ரூ.1000- வீதம் 500 புற உலக சிந்தனையற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழங்க மொத்த செலவு ரூ.5.00 லட்சம் – மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதற்கான நிதி அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு செயலாளர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

English Version:

Supply of Medical – Sensory Processing and Development Therapy/Rehabilitation Kit to children with Autism in Early Intervention Centres for Autism

There are 500 children with Autism attending early intervention services in 19 Early Intervention Centres in Tamil Nadu. Children with autism are hypersensitive or under-sensitive to light, noise, and touch. They need continuous sensory processing and development therapy and parents of these children are finding it difficult to manage these children during COVID-19. In order to help parent of children with Autism, Medical–Sensory Processing and Development Therapy/ Rehabilitation Kit consisting of 11 items namely smiley/spring ball, whistle, torch, blocks, crayons, flash cards, fidget gadget etc which can be used at home by parent for providing sensory stimulation and special nutrition kit with 2 items to these children has been prepared and sent to 19 districts for distribution. The outcome of these activities will be better focus, improved behavior, and even lowered anxiety. This special therapy/rehabilitation kit will be distributed through District Differently Abled Welfare Officers to the Organisations running the Early Intervention Centre. The cost of one kit is Rs.1000/- and the total cost is Rs.5 .00 lakh. The funds were met from the State Disaster Relief Funds sanctioned by the Government.

Secretary to Government

Welfare of Differently Abled Persons Department

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *