தூரத்தில் நானிருந்தாலும் சென்னையை துரத்தும் கரோனா என்னைக் கவலையடையச் செய்கிறது… தமிழிசை சௌந்தரராஜன்


தூரத்தில் நானிருந்தாலும் சென்னையை துரத்தும் கரோனா என்னைக் கவலையடையச் செய்கிறது..

கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால் கட்டுக்கடங்காமல் தெருவில் இறங்குகிறீர்கள்….

அங்கேயே வீட்டில் இருங்கள் என்றால் அங்காடிக்குச் செல்கிறோம் என்கிறீர்கள்…

கடைபிடியுங்கள் கட்டுப்பாடுகளை என்றால் கடைக்குப் போகிறேன் என்று கிளம்புகிறீர்கள்..

ஊரடங்கைக் கடைபிடியுங்கள் என்றால் ஊருக்குப் போகிறேன் அவசியம் என்கிறீர்கள்…

முகக்கவசம் அணியுங்கள் என்றால் மூச்சு முட்டுகிறது முடியாதென்கிறீர்கள்..

சமூக இடைவெளி வேண்டும் என்றால் சங்கடம் இடையில் இது எதற்கு என்கிறீர்கள்.

கை கழுவுங்கள் அடிக்கடி என்றால் கை கழுவுகிறீர்கள்! அவ்வேண்டுகோளை?

கரோனா கேட்கிறது… அடங்காமல் நீங்கள் இருந்துவிட்டு அடங்கவில்லை நான் எனக்கூறுவது சரியா?

எனவே…. அடிபணிவோம் அவசியகட்டளைகளுக்கு… அடித்து விரட்டுவோம் கரோனாவை! – என முடிவெடுங்கள்….முடித்துவையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை…

– தமிழிசை சௌந்தரராஜன்….

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *