தமிழகத்தில் உள்ள அனைத்து முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக மாதம் ₹5000 வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்: BJP மாநிலத் தலைவர் Dr.L.முருகன்


மே மாதம் 4ம் தேதி முதல், தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. பல்வேறு வகைப்பட்ட அத்தியாவசியப் பணிகளும் அனைத்து வகையான தொழில்களும், கடைகளும் திறக்க அனுமதி அளித்தும் கூட, சலூன்கள் திறக்க நோய் தொற்று காரணமாக அனுமதி இல்லை. முடி திருத்தகங்களுக்கு ஏன் அனுமதி இல்லை என்பதை அனைவருமே புரிந்து கொள்வர்.கர்நாடக பாஜக அரசு சுமார் 60000 சலவைத் தொழிலாளிகளுக்கும், 2,30,000 முடி திருத்துபவர்களுக்கும் மாதம் ரூபாய் 5000 நிவாரண தொகை அறிவித்துள்ளது.

எனவே இத்தகைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து முடி திருத்தும் தொழிலாளிக்கும், சலவைத் தொழிலாளிக்கும் குடும்ப நிவாரண உதவியாக மாதம் ரூபாய் 5000 (மீனவர்களுக்கு வழங்குவது போலவே) வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அவர்களது பணி துவங்க தமிழக அரசு அனுமதிக்கும் வரை இந்த நிவாரண உதவி தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *