தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் செயல்முறையை எளிதாக்குவதற்கான மின்-அடையாளத்தைப் பெறுவதற்கான மின்னஞ்சல் செயல்முறையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஊரடங்கு காலத்தில், தொழிலதிபர்கள் டிஜிட்டல் அல்லது ஆதார் அடிப்படையிலான மின்-அடையாளத்தைப் பயன்படுத்துவது கடினம் என்பதால் , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் செயல்முறையை எளிதாக்குவதற்கான மின்-அடையாளத்தைப் பெறுவதற்கான மின்னஞ்சல் செயல்முறையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது

கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பிற இடையூறுகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அறிவித்த ஊரடங்கு அமலில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தொழிலதிபர்கள்  சாதாரணமாக செயல்பட இயலாத நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன (EPFO) ​​இணையதளத்தில் தங்கள் டிஜிட்டல் கையொப்பங்கள் அல்லது ஆதார் அடிப்படையிலான மின்-அடையாளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.

தொழிலாளர்களின் சான்றுகளை அறிந்து கொள்ளுதல் (KYC) பரிமாற்ற உரிமைகோரல் சான்றளிப்பு போன்ற பல முக்கியமான பணிகள் தொழிலதிபர்களின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் அவர்களின் டிஜிட்டல் கையொப்பங்கள் (DSC) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) இணையதளத்தில், ஆதார் அடிப்படையிலான மின்-அடையாளங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் செய்யப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக, பல தொழிலதிபர்கள், ஒரு முறை ஒப்புதல் (one time approval) கோரிக்கைகளை பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்ப சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

மேற்கண்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த நடைமுறையை மேலும் எளிதாக்குவதற்கு, அத்தகைய கோரிக்கைகளை மின்னஞ்சல் மூலமாகவும் ஏற்றுக்கொள்வதற்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) ​​முடிவு செய்துள்ளது. இதன் மூலம் முறையாக கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை தொழிலதிபர் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்திற்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பலாம். பிராந்திய அலுவலகங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள் www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன.

மேலும், அத்தகைய நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் டிஜிட்டல் கையொப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள போதிலும், டாங்கிளைக் (dongle) கண்டுபிடிக்க முடியாதவர்கள் தொழிலதிபர் போர்ட்டலில் உள்நுழைந்து ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்களைப் பதிவு செய்வதற்கான இணைப்பு மூலம் அவர்களின் மின்-அடையாளத்தைப் பதிவு செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கையொப்பத்திற்கு உரிய அவர்களின் பெயர் அவர்களின் ஆதாரில் உள்ளதைப் போலவே இருந்தால், மின்-அடையாளத்தைப் பதிவு செய்வதற்கு மேலதிக ஒப்புதல் தேவையில்லை. அங்கீகரிக்கப்பட்ட பிற கையொப்பமிட்டவர்கள் தங்கள் மின் அடையாளங்களைப் பதிவுசெய்து தொழிலதிபர்களால் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதங்களை சம்பந்தப்பட்ட வருங்கால வைப்பு நிதி (EPFO) ​​அலுவலகங்களுக்கு அனுப்பி ஒப்புதலைப் பெறலாம்

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *